இவ்வளவு முட்டை ஆர்டர் வந்திருக்கா..!!
நமது அண்டை நாடும், நட்பு நாடா, எதிரிக்கு உதவும் நாடா என்றும் தெரியாத இலங்கை கடந்த சிலஆண்டுகளாக பெரிய பொருளாதார சிக்கல்களை சந்தித்ததை நாம் மறந்துவிட முடியாது. இந்த நிலையில் இலங்கையில் முட்டைக்கு தட்டுப்பாடு கடுமையாக அதிகரித்துள்ளது. அதனை சமாளிக்கும் வகையில் தினசரி 10 லட்சம் முட்டைகள் தேவை என்று இலங்கை இந்தியாவை அனுகியுள்ளது. இலங்கை வர்த்தக அமைப்பான STC அண்மையில் இந்தியாவை நாடியுள்ளது. அதில் இந்தியாவில் இருந்து 2 கோடி முட்டைகள் இறக்குமதி செய்யப்படுவதாகவும் அதில் 1 கோடி முட்டைகள் சந்தைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இந்த நிலையில் முட்டை தேவையை கருத்தில் கொண்டு தினசரி 10 லட்சம் முட்டையை இந்தியாவில் 3 நிறுவனங்களிடம் இருந்து வாங்க ஒப்பந்தம் தயாராகிறது. இறக்குமதி செய்யப்படும் முட்டைகள் அடுமனைகள்,பிஸ்கட் தயாரிப்பு ஆலைகள், மற்றும் உணவகங்களுக்கு இலங்கை பணத்தில் 35 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிறுவனங்கள் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவை என்ற விவரம் உடனடியாக வெளியாகவில்லை. கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் இலங்கையில் மீண்டும் சிக்கல் எழுந்துள்ளதால் நிலைமையை சமாளிக்க இலங்கை அரசு பல்வேறு முடிவுகளை எடுத்து வருகிறது. இதன் ஒருபகுதியாகவே இந்த முட்டை இறக்குமதி திட்டமும் செயல்படுத்தப்படுகிறது.