HDFC, HDFC Ltd இணைப்பு.. பங்குதாரர்களுக்கு 42% பங்குகள்..!!
இந்தியாவின் மிகப்பெரிய தனியார் வங்கியான HDFC, ஹவுசிங் ஃபைனான்ஸ் நிறுவனமான HDFC Limited-டுடன் இணையும் என்று நிறுவனங்கள் திங்கள்கிழமை தெரிவித்தன.
ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, HDFC Ltd -ன் பங்குதாரர்களுக்கு 25 பங்குகளுக்கு வங்கியின் 42 பங்குகளைப் பெறுவார்கள். எச்டிஎஃப்சி லிமிடெட்டின் தற்போதைய பங்குதாரர்கள் எச்டிஎஃப்சி வங்கியின் 41 சதவீதத்தை வைத்திருப்பார்கள்.
இணைப்பு குறித்து HDFC லிமிடெட் தலைவர் தீபக் பரேக், கூறுகையில் ” மலிவு விலையில் வீடுகள் மற்றும் விவசாயத் துறைக்கான கடன் உட்பட, முன்னுரிமைத் துறைக்கான கடன் அளவை வங்கிகளின் இணைப்பு அதிகரிக்கும்,” என்றார்.