சேமிப்புக் கணக்குகளுக்கான வட்டி விகிதம் மாற்றம் .. HDFC அறிவிப்பு..!!
ஹெச்டிஎஃப்சி வங்கி, சேமிப்பு வங்கிக் கணக்குகளுக்கான வட்டி விகிதங்களைத் திருத்தி அமைத்து, அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ஏப்ரல் 6, 2022 முதல் நடைமுறைக்கு வரும் திருத்தப்பட்ட விகிதத்தின்படி, HDFC வங்கி ₹50 லட்சத்திற்கும் குறைவான சேமிப்புக் கணக்குகளுக்கு 3% வருடாந்திர வட்டி விகிதத்தை வழங்குகிறது.
சேமிப்பு வங்கி டெபாசிட் கணக்குகளுக்கான வட்டி விகிதம் ₹50 லட்சத்துக்கும் அதிகமான சேமிப்பு இருப்புகளுக்கு 3.50% ஆக இருக்கும். உங்கள் கணக்கில் உள்ள தினசரி இருப்புகளின் அடிப்படையில் கணக்கிடப்பட்டு சேமிப்பு வங்கி வட்டி காலாண்டு இடைவெளியில் வங்கியால் செலுத்தப்படும்.
HDFC வங்கி ஒரு வருடத்தில் இருந்து இரண்டு வருடங்களில் முதிர்ச்சியடையும் ₹2 கோடிக்கும் குறைவான நிலையான வைப்புகளுக்கான வட்டி விகிதத்தையும் அதிகரித்துள்ளது. புதிய விகிதங்கள் ஏப்ரல் 6, 2022 முதல் அமலுக்கு வரும்.
சமீபத்திய உயர்வுக்குப் பிறகு, 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரை முதிர்ச்சியடையும் டெபாசிட்டுகளுக்கு வங்கி 2.5% முதல் 5.6% வரை வட்டி விகிதத்தை வழங்குகிறது.
இதற்கிடையில், பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB) சேமிப்புக் கணக்குகளுக்கான வட்டி விகிதத்தை ₹10 லட்சத்திற்கும் குறைவான இருப்புகளுக்கான வட்டி விகிதத்தை 2.70% ஆகக் குறைத்துள்ளது. ஏப்ரல் 4 முதல் அமுலுக்கு வரும் வகையில் ₹10 லட்சத்திற்கு மேல் இருப்பு வைத்துள்ள வங்கி சேமிப்பு கணக்குகளுக்கான வட்டி விகிதத்தை 2.75% ஆக குறைத்துள்ளது.