HDFC – HDFC வங்கி இணைப்பு முடிகிறது:
இந்திய அளவில் பிரபல நிறுவனமாக விளங்குகிறது hdfc நிறுவனம். இந்த நிறுவனத்தில் வங்கி பிரிவு தனியார் வங்கி களில் முக்கிய இடம் வகிக்கன்றது. இந்த நிலையில் இரு நிறுவனங்கள் இணைய இருக்கின்றன. இதற்கான பணிகள் பல மாதங்களாக நடைபெற்று வந்தன. இந்த நிலையில் குறிப்பிட்ட நிறுவனம் இணைப்பு என்பது வரும் 1ஆம் தேதி நிறைவடைய இருப்பதாக அறிவிக்கப்பட்டது. வரும் 30ஆம் தேதி இரு தனித்தனி நிறுவனங்கள் தங்கள் சங்க கூட்டத்தை நடத்த இருக்கின்றனர். hdfc நிறுவன பங்குகள் வரும் 13ஆம் தேதி பங்குச் சந்தையில் இருந்து திரும்பப் பெறும் நடவடிக்கைகள் செய்யப்பட்டுள்ளன. இரு நிறுவன இணைப்பு குறித்து ஏப்ரல் 4இல் அறிவிப்பு வெளியாகி இருந்தது. கடந்த மாதம் 24ஆம் தேதி பணிகளை இன்னும் ஒரு மாதத்தில் நிறைவு செய்ய இருப்பதாக hdfc நிறுவன அதிகாரிகள் கூறினர். இந்த இரு நிறுவன இணைப்பு என்பது கூட்டாக இணைந்து முன்னேற்றம் அடைவதற்காக செய்யப்பட்டதாக அறிவி்கப்பட்டது. முக்கியமான இரு நிறுவன இணைப்பு சாத்தியம் ஆகும் பட்சத்தில் வங்கித்துறையில் பெரிய மாற்றம் ஏற்படும் என்று எதிர்பார்க்கபட்டுள்ளது.