உலகின் 4-ஆவது பெரிய வங்கியானது HDFC..
இந்தியாவில் பிரபலமான நிறுவனங்களில் HDFC வங்கிக்கு மிக முக்கிய பங்கு உள்ளது. இந்த நிறுவனமும் இதன் தாய் நிறுவனமான HDFC நிறுவனமும் ஒன்றிணைக்கும் பணிகள் முடிந்துள்ளன. இந்த இணைப்பின் மூலம் HDFC நிறுவனம் உலகின் 4ஆவது பெரிய வங்கியாக மாறியுள்ளதாக புளூம்பர்க் நிறுவனம் தெரிவித்துள்ளது. உலகளவில் ஜே.பி. மார்கன், சீன தொழில் மற்றும் வணிக வங்கி இரண்டாம் இடமும், அமெரிக்க வங்கி 3ஆம் இடத்திலும் உள்ளது. 4ஆம் இடத்தில் எச்டிஎப்சி நிறுவனம் முன்னேறியுள்ளது. எச்டிஎப்சி நிறுவனத்தின் ஒருங்கிணைந்த மதிப்பு 172 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்ந்திருக்கிறது. இந்திய கார்பரேட் வரலாற்றிலேயே பெரிய கார்பரேட் பரிவர்த்தனையாக எச்டிஎப்சி இணைப்பு மாறியுள்ளது. இரு நிறுவனங்களின் சொத்து மதிப்பு 18 லட்சம் கோடி ரூபாயாக மாறியுள்ளது.இரு நிறுவனங்களும் இணைந்து 12 கோடி வாடிக்கையாளர்களை கொண்டுள்ளன. இது ஜெர்மனியின் மக்கள் தொகையை விடவும் அதிகமாகும்,எச்டிஎப்சி நிறுவனத்தில் மொத்தம் 1லட்சத்து 77ஆயிரம் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.எச்டிஎப்சி வங்கியில் எச்டிஎப்சி நிறுவனத்தின் பங்கு 41 விழுக்காடு இருக்கும். உலகளவில் வெகு சில நிறுவனங்களில் மட்டுமே இத்தனை பெரிய பணம் இருப்பதாக கூறியுள்ள நிபுணர்கள்,ஆண்டுக்கு 18 முதல் 20 விழுக்காடு வளர்ச்சியை எச்டிஎப்சி வங்கி பெறும் என்றும் கணித்துள்ளனர்.
அடுத்த நான்கு ஆண்டுகளில் இந்த நிறுவனம் தனது கிளைகளை இரட்டிப்பாக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.