எக்ஸைட் லைஃபில் 100 சதவீத பங்குகளை வாங்கிய எச்.டி.எஃப்.சி லைஃப்!
தனியார் துறை ஆயுள் காப்பீட்டாளரான எச்.டி.எஃப்.சி லைஃப் ₹6,687 கோடிக்கு எக்ஸைட் இண்டஸ்ட்ரீஸின் ஒரு அங்கமான எக்ஸைட் லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனத்தினுடைய 100 சதவீத பங்குகளை வாங்குகிறது.
இந்த ₹6,887 கோடியில், ₹725 கோடியை ரொக்கத்திற்கும், மீத ₹87.02 மில்லியன் ஈக்விட்டி பங்குகளை எக்ஸைட் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்திற்கு ஒரு பங்கிற்கு ₹685 விலையில் வழங்க எச்.டி.எஃப்.சி லைஃப் திட்டமிட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி எக்ஸைட் லைஃப்பில் எக்ஸைட் இன்டஸ்ட்ரீஸின் முதலீடு ₹1,679.59 கோடி.
இரண்டு நிறுவனங்களுக்கிடையில் இந்த ஒப்பந்தம் இரண்டு நிலைகளில் கட்டமைக்கப்பட்டுள்ளது. கையகப்படுத்திய பிறகு, எக்ஸைடு லைஃப் எச்.டி.எஃப்.சி லைஃப்பின் துணை நிறுவனமாக மாறும், பின்னர் சில காலத்திற்கு பிறகு எச்.டி.எஃப்.சி லைஃப்வுடன் இணைக்கப்படும்.
எக்ஸைட் லைஃபினால் எச்.டி.எஃப்.சி லைஃப் மேலும் பல இடங்களுக்கு விரைவாக பறந்து விரியும். ஏனெனில் எக்ஸைட் தென்னிந்தியாவில், குறிப்பாக பெரு மாநகராட்சிகளில் வலுவான அடித்தளத்தைக் கொண்டுள்ளது. எச்.டி.எஃப்.சி லைஃபில் உள்ள ஏஜெண்டுகளின் எண்ணிக்கையும் 107,895 லிருந்து 144,605 ஆக உயரும்.
2022-ஆம் நிதியாண்டின் காலாண்டு ஒன்றின் நிலவரப்படி, தனியார் ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களில் எச்.டி.எப்ஃசி லைஃப் தான் அதிக ஏஜெண்டுகளை சேர்த்தது. இந்த பரிவர்த்தனை செய்திக்கு பிறகு சந்தையில் எச்.டி.எப்ஃசி லைஃப் சற்று சரிந்திருந்தாலும், இரு நிறுவனங்களுக்கும் முன்னேற்றத்தை வழங்கக்கூடியதாகவே பார்க்கப்படுகிறது.