பந்தன் வங்கியில் HDFC 4.96 கோடி முதலீடு.. பந்தன் வங்கி பங்குகள் உயர்வு..!!
HDFC லிமிடெட், பந்தன் வங்கியில் 4.96 கோடி பங்குகளை மொத்த ஒப்பந்தம் மூலம் விற்பனை செய்துள்ளது.
BSE உடனான தரவுகளின்படி, HDFC லிமிடெட் பங்குகளை ஒவ்வொன்றும் ரூ.306.61க்கு விற்றது. பங்கு விற்பனையானது பந்தன் வங்கியில் ஹெச்டிஎஃப்சியின் சுமார் 3.1 சதவீத பங்குகளாகும். டிசம்பர் 31, 2021 நிலவரப்படி, HDFC லிமிடெட் பந்தன் வங்கியில் 9.89 சதவீத பங்குகளில் 15.93 கோடி பங்குகளை வைத்துள்ளது.
எச்டிஎஃப்சி வங்கியுடன் ஹெச்டிஎஃப்சி லிமிடெட் இணைப்பு அறிவிப்பு வெளியான உடனேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக, HDFC லிமிடெட் தற்போதைய ஒழுங்குமுறை விதிமுறைகளை பூர்த்தி செய்ய பந்தன் வங்கியில் அதன் பங்குகளை 5 சதவீதத்திற்கும் குறைவாக வைத்திருக்க வேண்டும்.
இந்நிலையில் பந்தன் வங்கி பங்குகள் 2.6 சதவீதம் உயர்ந்து ஒவ்வொன்றும் ரூ.323.75 ஆக முடிந்தது.