Abu Dhabi-யுடன் Mega Deal..HDFC-ன் அதிரடி ஆக்க்ஷன்..!!
HDFC நிதி நிறுவனம் Abu Dhabi Investment Authority-க்கு பங்குகளை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது.
இந்தியாவை சேர்ந்த முன்னணி தனியார் நிதி நிறுவனமான HDFC பல்வேறு கடன்களை வழங்குதல், வங்கி உள்ளிட்ட சேவைகளை செய்து வருகிறது.
அண்மையில் HDFC வங்கியும், ஹவுசிங் ஃபைனான்ஸ் நிறுவனமான HDFC Limited-ம் இணைந்தன.
இந்நிலையில், தற்போது, HDFC-யின் துணை நிறுவனமான HDFC Capital நிறுவனத்தின் 10 சதவீத பங்குகளை Abu Dhabi Investment Authority-க்கு விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது.
இதற்காக 184 கோடி ரூபாய்க்கான ஒப்பந்தத்தில் HDFC Capital-லும், Abu Dhabi Investment Authority-யும் கையெழுத்திட்டுள்ளன. இதன் மூலம் கிடைக்கும் வருவாயை HDFC Capital மூலம் வருவாயை மேம்படுத்தவும், தொழில்நுட்பம் தொடர்பான பணிகளுக்கு பயன்படுத்தவும் திட்டமிட்டுள்ளதாக எச்டிஎஃப்சி தெரிவித்துள்ளது.
இதுதொடர்பான அறிவிப்பு வெளியான நிலையில், HDFC Capital பங்குகளின் விலை நல்ல ஏற்றத்தில் காணப்பட்டது.