அதிகரிக்கும் “ஹெல்த் இன்சூரன்ஸ்” விலை ! உங்கள் இன்சூரன்ஸில் “கோவிட் கவர்” இருக்கிறதா?
ஒரு மருத்துவ நெருக்கடியான காலத்தில் இருக்கிறோம், உலகம் கடந்த இரண்டு ஆண்டுகளில், கோவிட் பெருந்தொற்றால் ஏறத்தாழ 60 லட்சம் உயிரிழப்புகளை சந்தித்துள்ளது. சமூகப் பாதுகாப்பும், அரசு வழங்கும் நிவாரணங்களும் இருக்கும் வளர்ந்த பணக்கார நாடுகளில் உயிரிழப்பால் குடும்பங்கள் சந்திக்கும் பொருளாதார சிக்கல்களில் இருந்து மீண்டு வருவது எளிதானது, ஆனால், இந்தியாவைப் போன்ற மூன்றாம் உலக நாடுகளில் வசிக்கும் கோடிக்கணக்கான நடுத்தர மக்கள் இந்த காலகட்டத்தில் சந்திக்கும் இழப்புகளை ஈடுகட்ட முடியாமல், முறையான மருத்துவ வாய்ப்புகள் இல்லாமல் தங்கள் அன்பானவர்களை இழக்கிறார்கள்.
கோவிட் மிக வேகமாகப் பரவும் காலத்தில் ICU-க்களின் தேவை அதிகரித்துள்ளது. ஒவ்வொரு கொரோனா வைரஸ் நோயாளிக்கும் உடனடி மருத்துவ கவனிப்பு தேவைப்படுகிறது, கோவிடால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிலசமயங்களில் வென்டிலேட்டர் தேவைப்படுவதால் நோயாளி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படுகிறார். அதில் பலருக்கும் குறைந்தது 4-5 நாட்கள் ICU வில் இருந்து ஆக்சிஜன் செலுத்துவது அவசியமாகிறது, இந்த அவசர காலத்தில் உங்களையும், உங்கள் குடும்ப உறுப்பினர்களையும் பாதுகாப்பது “ஹெல்த் இன்சூரன்ஸ்”. ஆகவே உங்களிடம் ஹெல்த் இன்சூரன்ஸ் இருக்கிறதா? இருந்தால் அது கோவிட் கால மருத்துவ பாதுகாப்பை வழங்குகிறதா என்று உடனடியாக நீங்கள் தெரிந்து கொள்வது மிக அவசியம்.
மருத்துவத் துறையில் பணவீக்கம் வேகமாக அதிகரித்து வருகிறது, நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் தனியார் மருத்துவமனைகளில் முறையான சிகிச்சை பெறுவது கடினமாக இருக்கிறது, ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசிகளின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது, ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசிகளை எடுப்பதற்கான விதிகளை காப்பீட்டு நிறுவனங்கள் தொடர்ந்து கடினமானதாக்கி வருகின்றன. இந்த சூழலில் ஒரு சிறந்த ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசி உங்களுக்கு பல நெட்வொர்க் மருத்துவமனைகளில் தரமான சிகிச்சையை உறுதி செய்கிறது.
ஒவ்வொரு குடும்ப உறுப்பினரும் போதுமான தொகையை காப்பீடு பெறுவதை உறுதி செய்வது மட்டுமல்லாமல், பல உறுப்பினர்களுக்கு ஒரேநேரத்தில் சிகிச்சை தேவைப்பட்டால் மோசமான நிலையில் உங்கள் பாலிசி கவர் போதுமானதாக இருக்க வேண்டும். இந்த நேரத்தில் அடிப்படை பாலிசியின் காப்பீட்டு கவரேஜ் தொகையை அதிகரிக்க வேண்டும். இப்போதுள்ள பாலிசியில் அதை செய்ய முடியுமா, அல்லது புதிய ஒன்றைத் தேர்வு செய்ய வேண்டுமா என்பதையும் நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்.
கோவிட் காலத்தில் ஒரே குடும்பத்தில் ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறும்போது கவரேஜ் போதுமானதாக இருப்பதில்லை, அப்போது “அடிஷனல் கவர்” (Additional Cover) “சூப்பர் டாப் அப்” (Super Top Up) “ஃபேமிலி ஃபிளோட்டர்ஸ்” (Family Floater) போன்ற சிறந்த பாதுகாப்பளிக்கும் பாலிசிகள் கிடைக்கிறது.
உங்களிடம் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசி இருக்கிறதா? இருந்தால் அது எந்த மாதிரியான நோய் சிகிச்சைகளுக்குப் பயன்படும்? கோவிட் சிகிச்சைக்கு உங்கள் பாலிசி பொருந்துமா? ஒரு புதிய கோவிட் பாதுகாப்பை வழங்கும் பாலிசியை நீங்கள் பெற விரும்புகிறீர்களா? அல்லது இப்போதிருக்கும் பாலிசியை கோவிட் பாதுகாப்புக்கு ஏற்றபடி மாற்றிக் கொள்ள முடியுமா? உங்கள் பாலிசியை “டாப் அப்” செய்ய விரும்புகிறீர்களா? உடனடியாக எங்கள் காப்பீட்டு ஆலோசகரிடம் உங்கள் சந்தேகங்களை தயக்கமின்றிக் கேட்கலாம்.
உடனடியாக நர்மதா அவர்களை 9150059377 என்ற மொபைல் நம்பரில் தொடர்பு கொள்ளுங்கள் அல்லது வாட்ஸப்பில் உங்கள் கேள்விகளை அனுப்புங்கள்.