வருகிறது ஹெக்ஸாகன் நியூட்ரிஷன் IPO !
ஹெக்சாகான் நியூட்ரீசியன் நிறுவனம் ஐபிஓ மூலமாக 600 கோடி ரூபாயை திரட்டுவதற்காக செபியிடம் மனுவை தாக்கல் செய்தது. மும்பையை தலைமையிடமாகக் கொண்ட ஹெக்சாகான் நியூட்ரிசியன், தயாரிப்பு மற்றும் விநியோகம் ,ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு துறையில் கவனம் செலுத்துகிறது. ஈக்குவிட்டி ஷேர் பங்குகள் மூலாக 100 கோடி ரூபாயும், ஆஃபர் பாஃர் சேல்ஸ் முறையில் 3,01,13,918 பங்குகளையும் வெளியிடுவதாக நிறுவனத்தின் ரெட் ஹெர்ரிங் ப்ராஸ்பெக்டஸ் தெரிவிக்கிறது.
ஆஃபர் பாஃர் சேல்ஸ் முறையில் அருண் புருசோத்தம் கேல்கரிடம் உள்ள77 லட்சம் பங்குகளையும், சுபாஷ் புருசோத்தம் கேல்கரிடம் உள்ள 61.36 இலட்சம் பங்குகளையும், அனுராதா அருண் கேல்கரிடம் இருக்கும் 15 இலட்சம் பங்குகளையும், நுதன் சுபாஷ் கேல்கரிடம் இருந் 25 இலட்சம் பங்குகளையும். சோமர்செட் இண்டெஸ் ஹெல்த்கேர் பண்ட் லிமிடெட்டிடம் உள்ள 1.32 கோடி மதிப்புள்ள பங்குகளையும், மயூர் சர்தேசாயிடம் உள்ள 73,668 பங்குகளையும் விற்க உள்ளனர்.
ஒரு பங்கின் விலை 500 ரூபாயிலிருந்து 600 வரை இருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன, புதிய முதலீட்டை நிறுவனத்தின் கடன்களை செலுத்துவதற்கும், சில்லறை கடன்களை திரும்ப செலுத்துவதற்கும், தொழிலை விரிவாக்கம் செய்வதற்கும் பயன்படுத்துவோம் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. ஈக்குர்ஸ் கேப்பிட்டல் மற்றும் எஸ்பிஐ கேபிட்டல் மார்க்கெட்ஸ் ஆகிய நிறுவனங்கள் நிதி மேலாளராக இருக்கும்.