அரே பாய் கொஞ்சம் பணம் இருந்தா குடுங்களேன்…
அசுர வேகத்தில் வளர்ந்த கவுதம் அதானி அண்மையில் வெளியான ஹிண்டன்பர்க் அறிக்கையால் கண்ணாடி மீது கல்வீசியதைப் போல சிதறித்தான் போய்விட்டார். ஒரு பக்கம் பங்குச்சந்தைகளில் தனது நிறுவன பங்குகள் சரிவு,மற்றொரு பக்கம் அரசியல் அழுத்தங்கள். நிலைமை இப்படி இருக்க, நிறுவனங்களை நடத்த போதுமான பணம் புழங்காமல் இருந்ததாக கருதிய அதானி குழும அதிகாரிகள் உடனே அபுதாபிக்கு பறந்துவிட்டனர். அங்குள்ள பிரபல நிறுவனமான International Holding Corp நிறுவனத்திடம் கடன் கேட்டுள்ள அதானி, பணம் வேண்டும் என்று மட்டுமே கேட்டுள்ளார். 1 முதல் ஒன்றரை பில்லியன் அமெரிக்க டாலராக கடன் இருக்கும் என்று அபுதாபி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இதுவரை எவ்வளவு தொகை கடனாக கிடைக்கப்போகிறது என்ற எந்த தகவலும் வெளியாகவில்லை கவுதம் அதானி,அந்த குழுமத்தின் மூத்த அதிகாரிகள் அரபு நாடுகளுக்கு நேரிடியாகவே சென்று கடன் கேட்டது உறுதியாகியுள்ளது. மும்பை விமான நிலையம்,அதானி போர்ட்,அம்பானியின் சிமெண்ட் கம்பெனிகளில் வளர்ச்சி அதிகம் உள்ளபோதிலும் முதலீடுகளை இன்னும் பெரிதாக்க அதானி தீவிரம் காட்டி வருகிறார். இதற்காகவே அரபு நாடுகளுக்கு சென்றுள்ளதாகவும் தெரிகிறது. குறிப்பிட்ட ஐஎச்சி நிறுவனம் அதானி குழுமத்தில் 2 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு முதலீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.