உயர பறக்கும் ஊபர் வியாபாரம்….
ஊபர் நிறுவனம் அதன் 2ஆவது காலாண்டில் செமத்தியானலாபத்தை சம்பாதித்துள்ளது.394 மில்லியன் மெரிக்க டாலர்கள் இரண்டாவது காலாண்டில் வருமானமாக பதிவாகியுள்ளது. 49.2 மில்லியன் அமெரிக்க டாலர் கடனில் இருந்து அந்நிறுவனம் மீண்டுள்ளது.முதலீட்டாளர்கள் அதிகளவில் நிதியை முதலீடு செய்திருப்பதால் ஊபர் மீது நம்பிக்கை ஏற்படத் தொடங்கியிருக்கிறது.326 மில்லியன் அமெரிக்க டாலர் முதலீடுகளை அந்நிறுவனம் பெற்றுள்ளது. அந்நிறுவனத்தில் பணப்புழக்கம் என்பது 1.14 பில்லியன் அமெரிக்க டாலர்களாக பதிவாகியுள்ளது.அமெரிக்க பங்குச்சந்தையில் இந்த நிறுவன பங்குகள் 3.7% உயர்ந்துள்ளது. வாடிக்கையாளர்கள் அதிகம் பேர் ஊபர் சேவையை பயன்படுத்தத் தொடங்கியுள்ளதால் இந்த நிறுவனம் லாபத்தை எட்டியுள்ளது. 34 பில்லியன் டாலரில்இருந்து35 பில்லியன் டாலராகவும் உயர்ந்துள்ளது.975 மில்லியனில் இருந்து 1பில்லியன் அமெரிக்க டாலர்களாக பணம் புழக்கம் அதிகரித்துள்ளது.இவை இரண்டும் ஏற்கனவே நிபுணர்கள் கணித்த அளவைவிட அதிகமாகும்.2019ஆம் ஆண்டில் இருந்து பணியில் இருந்த தலைமை நிதி அதிகாரியான நெல்சன் சாய் கடந்த ஜனவரி 5ஆம் தேதி பதவி விலகினார். ஊபர் நிறுவனம் முதல் முறையாக லாபகரமாக மாறியுள்ளதற்கு அந்நிறுவன அதிகாரிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.ஊபர் நிறுவனம் அதன் செயலியில் புதிய மாற்றங்களை கொண்டுவர இருக்கிறது. அதாவது குழுவாக பயணிக்கும் வசதி, வீடியோ மெசேஜ் வசதி உள்ளிட்டவை ஊபரில் அறிமுகமாக இருக்கின்றன.
கொரோனா காலகட்டத்தில் பெரிய பாதிப்புகளை சந்தித்த ஊபர் நிறுவனம் அதன் முழு பாதிப்பிலும் இருந்து மீண்டு லாபகரமாக மாறியுள்ளது. இந்தியாவில்தான் ஊபர் ஈட்ஸ் நிறுவனம் இல்லையே தவிர்த்து அமெரிக்காவில் போக்குவரத்து சேவையில் கொரோனா காலகட்டத்தில் பாதிப்பு இருந்தபோதும் புட் டெலிவரி வியாபாரம் தொய்வின்றி நடந்தது கைகொடுத்துள்ளது.