செப்டம்பரில் உயர்ந்த விலைவாசி…
இந்தியாவில் செப்டம்பர் மாதம் மொத்த பணவீக்கம் 0.26%மைனசில் உள்ளதாக வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சக தரவுகள் தெரிவிக்கின்றன.இதே அளவு இதற்கு முந்தைய மாதத்தில் 0.52 %மைசில் இருந்தது. கடந்தாண்டு செப்டம்பரில் 10.55%இந்த WPI விகிதம் இருந்தது. கடந்த ஏப்ரலில் இருந்து தொடர்ந்து 6 மாதங்களாக பணவீக்க அளவு என்பது மைனலிசிலேயே இருக்கிறது. ரசாயன பொருட்கள் மினரல் ஆயில்,ஜவுளி மற்றும் உலோகம் ஆகியவையும், உணவுப் பொருட்கள் விலையும் குறைந்ததால் இந்த விலைவாசி குறைந்ததாக கூறப்படுகிறது. மொத்த பணவீக்கம் என்பது செப்டம்பரில் 3.70%ஆக இருக்கிறது. இது ஆகஸ்ட்டில் 6.34%ஆக இருந்தது. எண்ணெய் விலை தொடர்பான பணவீக்கம் என்பது மைனஸ் 3.35%ஆக இருக்கிறது. இது கடந்த ஆகஸ்ட்டில் மைனஸ் 6.03%ஆக இருந்தது. உற்பத்தி துறையில் ஆகஸ்ட்டில் மைனஸ் 2.37 விழுக்காட்டில் இருந்து மைனஸ் 1.34%ஆக குறைந்துள்ளது. ஆகஸ்ட்டில் 5.62% ஆக இருந்த உணவுப்பொருட்கள் விலை செப்டம்பரில் 5.64%ஆக குறைந்திருக்கிறது. நுகர்வோர் பணவீக்கம் என்பது ஆகஸ்ட்டில் 6.83%ஆக இருந்தது. இது கடந்த செப்டம்பரில் 5.02% ஆக குறைந்திருந்தது.மாந்தோறும் இருக்கும் அனைத்து பொருட்கள் குறியீடும் செப்டம்பரில் மைனஸ் 0.59%ஆகியுள்ளது இந்த அனைத்து பொருட்கள் குறியீடு என்பது ஆகஸ்டில் 189.6 புள்ளிகளாக இருந்தது. கடந்தமாதம் 182.4 ஆக சரிந்துள்ளது.கச்சா எண்ணெய் மற்றும் ஆற்றல்துறை குறியீடு என்பது ஆகஸ்ட்டில் 149.6புள்ளிகளாக இருந்தது. ஆனால் செப்டம்பரில் திடீரென 153.1 புள்ளிகளாக உயர்ந்துள்ளது.
உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களின் தரக்குறியீடு ஆகஸ்ட்டில் 139.8 புள்ளிகளாக இருந்த நிலையில்,செப்டம்பரில் 140 புள்ளிகளாக உயர்ந்துள்ளது. அடிப்படையான உலோகங்களின் விலை என்பது இயந்திரங்கள், ரப்பர், பிளாஸ்டிக் பொருட்கள் உள்ளிட்டவற்றின் விலையையும் தீர்மானிக்கும் திறன் கொண்டது.இது கடந்த செப்டம்பரில் உயர்ந்திருக்கிறது. அதே நேரம் உணவுப்பொருட்கள்,மோட்டார் வாகனங்கள்,மின்சாதன உபகரனங்கள்,லெதர் மற்றும் ரசாயன பொருட்கள் விலை குறைந்திருப்பதாகவும் வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.