22 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகம்..
அமெரிக்க வரலாற்றிலேயே இல்லாத அளவாக 22 ஆண்டுகள் அதிகபட்ச ஃபெடரல் ரிசர்வ் வட்டி விகிதம் இரண்டாவது மாதமாக தொடர்கிறது. அண்மையில் அமெரிக்க கருவூல ஈட்டிய விகிதம் அதிகரித்துள்ளதால் அது பொருளாதாரம் மற்றும் பணவீக்கத்தில் பிரதிபலித்துள்ளது. அமெரிக்காவின் பெடரல் ஓபன் மார்கெட் கமிட்டி கூட்டம் நேற்று நடைபெற்றது. இதன்பின்னர் வட்டி விகிதத்தில் பெரிய மாற்றமில்லை என்று தெரிவிக்கப்பட்டது. அமெரிக்க பெடரல் ரிசர்வ்வின் வட்டி விகிதம் 5.5%ஆகவே இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது கடந்த 2001ஆம் ஆண்டுக்கு பிறகு அதிகபட்சமாகும். பணவீக்கம் ஓரளவு கட்டுப்பட்டு வரும் சூழலில், வட்டி விகிதத்தை குறைப்பது குறித்து அமெரிக்க பெடரல் ரிசர்வ் ஆலோசித்து வருகிறது.இது தொடர்பான அறிவிப்பு வெளியானதும் டாலரின் மதிப்பு சரிந்தது. இதன் காரணாக அமெரிக்க பங்குச்சந்தையான S&P500 பங்குச்சந்தைகள் ஏற்ற இறக்கத்தை சந்தித்துள்ளன.பணவீக்கம் 2%க்கும் அதிகமாக இருக்கக்கூடாது என்பதற்காகவே கடன் விகிதங்களின் வட்டி அளவு குறைக்கப்படாமல் இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
அமெரிக்க பெடரல் ரிசர்வின் அடுத்த கூட்டம் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில்அடுத்தடுத்து நடைபெற உள்ளன. கடன்களுக்கான வட்டி விகிதம் வரும் இரண்டு மாதங்களில் அதிகரிக்கவே வாய்ப்பிருப்பதாகவும் ஏற்கனவே குறிப்பிடப்பட்டுள்ளது. அமெரிக்காவில் அடமானக்கடன் விகிதம் அதிகரிப்பு, இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போர் ஆகிய பிரச்னைகள் அமெரிக்க நிலைமையை சிக்கிலாக்கியுள்ளன.நிதி கொள்கைகளை கடுமையாக்குவதன் மூலமாக பணவீக்கத்தை கட்டுப்படுத்த முடியும் என்று அமெரிக்க பெடரல் ரிசர்வ் தலைவரான ஜெரோம்பாவல் குறிப்பிட்டுள்ளார்.