இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் வங்கி சிஇஓ:
இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் வங்கி சிஇஓவாக சசிதர் ஜகதீசன் திகழ்கிறார்.நடப்பு நிதியாண்டில் அவருக்கு சம்பளமாக 10 கோடியே 55 லட்சம் ரூபாய் அளிக்கப்பட்டுள்ளது. கைசாத் பாரூசா என்பவருக்கு இந்த பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளார்.இவருக்கு சம்பளமாக 10 கோடி ரூபாய் அளிக்கப்படுகிறது. ஆக்சிஸ் வங்கியின் சிஇஓவான அமிதாப் சவுத்ரிக்கு சம்பளமாக 9 கோடியே 75 லட்சம் ரூபாய் அளிக்கப்படுகிறது. iciciவங்கியின் சிஇஓவுக்கு சம்பளமாக 9 கோடியே 60 லட்சம் ரூபாய் அளிக்கப்படுகிறது. கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு கோடக் மகேந்திரா வங்கியின் சிஇஓவான கோடக் மகேந்திரா தனது சம்பளத்தை ஆண்டுக்கு 1 ரூபாயாக நிர்ணயித்துள்ளார் கோடக் மகிந்திரா வங்கிதான் மற்ற வங்கிகளை விட அதிக சம்பளம் தரும் வங்கியாக திகழ்கிறது.ஓராண்டில் மட்டும் 16.97%அளவுக்கு வருவாய் அந்த வங்கி ஊழியர்களுக்கு அதிக சம்பளம் அளிக்கப்பட்டுள்ளது. ஆக்சிஸ் வங்கியில் பணியாற்றுவோருக்கு கடந்தாண்டு 7.6% சம்பள உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. எச்டிஎப்சி வங்கி சம்பளப்பட்டியலில் அடுத்த இடத்தில் உள்ளனர். இந்த நிறுவனம் தனது பணியாளர்களுக்கு கடந்த நிதியாண்டில் 2.51 % சம்பள உயர்வு அளித்துள்ளது. ஜகதீசனுக்கு அதிகபட்சமாக அடிப்படை சம்பளம் 2.82 கோடிரூபாய் அளிக்கப்படுகிறது. 3 கோடியே 31 லட்சம் ரூபாய் சலுகைகளாகவும்,வருங்கால வைப்பு நிதியாக 33.92 லட்சம் ரூபாயும் அளிக்கப்படுகிறது. கடந்தாண்டு ஜகதீசனுக்கு சம்பளமாக வெறும் 6.51 கோடி ரூபாய்தான் அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.