அதானி குழுமத்தை அசைத்துப் பார்த்த ஹிண்டன்பர்க் அறிக்கை!!!
அதானி குழுமம் தவறுதலாக சில பங்குகளை மதிப்பிட்டு வருவதாகவும், சில சட்ட விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக அமெரிக்க நிறுவனமான ஹிண்டன்பர்க் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான அறிக்கை வெளியாகிய 2 நாட்களில் அதானி குழுமத்தின் பங்குகள் 20% வரை சரிந்தன. கடந்த 2 நாட்களில் மட்டும் அதானி குழுத்துக்கு 1 லட்சம் கோடி ரூபாய் இழப்பு நேரிட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நஷ்டத்தை அதானி துறைமுக பங்குகள் எட்டியுள்ளன. அதானி டிரான்ஸ்மிஷன்,அதானி கிரீன், அதானி டோட்டல் கேஸ்,அம்புஜா சிமெண்ட் உள்ளிட்ட நிறுவனங்களிலும் 20% வரை சரிவு காணப்பட்டது. அதானி குழுமத்தின் FPO வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது. 20 ஆயிரம் கோடி ரூபாய்க்கு வெளியிடப்பட்ட FPOவின் மதிப்பு 3ஆயிரத்து 47 கோடி ரூபாயாக சரிந்துள்ளது. சர்வதேச அளவில் முதலீடுகளில் பாதிப்பை ஏற்படுத்தவே அதானி குழுமத்தின் மீது ஹிண்டன்பர்க் இத்தகைய அபாண்ட குற்றச்சாட்டை தெரிவித்துள்ளதாக அதானி குழுமம் தெரிவித்துள்ளது. அதானி குழுமத்தின் 5 முக்கிய நிறுவனங்களின் கடன் மட்டுமே 2.1 டிரில்லியன் ரூபாய் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. நேட் ஆண்டர்சன் என்பவரால் 2017ம் ஆண்டு துவங்கப்பட்ட ஹிண்டன்பர்க் நிறுவனம், அமெரிக்கா மற்றும் இந்தியாவில் அதானி குழுமம் செய்துள்ள முறைகேடான முதலீடுகள் குறித்தும் 2 ஆண்டுகள் ஆராய்ந்து அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.