ஹிண்டன்பர்க்கின் புதிய குற்றச்சாட்டு..

இந்திய பங்குச்சந்தைகள் ஒழுங்குமுறை அமைப்பான செபி அனுப்பிய நோட்டீசுக்கு அமெரிக்க நிறுவனமான ஹிண்டன்பர்க் தற்போது விளக்கம் அளித்துள்ளது. அதில், அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம், இந்திய விதிகளை மீறியதாக குறிப்பிடப்பட்டுறள்ளது. இதற்கு பதில் அளித்துள்ள அமெரிக்க நிறுவனம், முட்டாள்தனமாக இருப்பதாக விளக்கம் அளித்துள்ளது. மேலும் பங்குச்சந்தை தரகர்களுக்கு செபி அழுத்தம் தந்து அதானி குழும பங்குகளில் உள்ள குறைபாடுகளை மறைப்பதாகவும், இது பற்றி தகவல் அறியும் உரிமை சட்டத்தில் முறையிடப்போவதாகவும் ஹிண்டன்பர்க் குறிப்பிட்டுள்ளது.
அதானி குழுமத்தின் மீது தங்கள் நிறுவனம் முன்வைத்த புகார்கள் குறித்து வெளிப்படைத்தன்மையும், விசாரணை நிலையும் என்ன என தெரிந்துகொள்ள தகவல் அறியும் உரிமைச்சட்டத்தை பயன்படுத்த உள்ளதாகவும் ஹிண்டன்பர்க் குறிப்பிட்டுள்ளது.
கடந்தாண்டு அதானி குழும பங்குகளின் மதிப்பில் 150 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவுக்கு சொத்து மதிப்பை சரித்துப்பார்த்ததில் ஹிண்டன்பர்க் நிறுவன பங்கு மிக மிக அதிகம். அதானி குழுமத்தின் மீது குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ள போதும், செபி அமைப்பு அதானி குழுமத்தை பாதுகாப்பாகவும் ஹிண்டன்பர்க் கூறியுள்ளது. அதானி குழுமத்தின் மீது குற்றச்சாட்டுகளை கூறியது போல் வேறு நிறுவனங்கள் பற்றி சொல்ல முடியாத அளவுக்கு செபி தங்களுக்கு தடை விதிக்கவும் வாய்ப்பிருப்பதாகவும் ஹிண்டன்பர்க் தனது விளக்கத்தில் குறிப்பிட்டுள்ளது. 4.1 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவுக்கு செலவு செய்திருப்பதாக கூறியுள்ள ஹிண்டன்பர்க், உலகளாவிய விசாரணைகளுக்கு 2 ஆண்டுகள் தேவைப்பட்டதையும் ஹிண்டன்பர்க் குறிப்பிட்டு பேசியுள்ளது.