இன்வஸ்கோ இந்தியா அசட் நிறுவனத்தை வாங்கும் இந்துஜா..
மொரீசியஸ் அடிப்படையிலான IIHL நிறுவனம், இன்வெஸ்கோ நிறுவனத்தில் முதலீடு செய்வது உறுதியாகியுள்ளது. அதாவது இன்வெஸ்கோ நிறுவனத்தின் 60 விழுக்காடு பங்குகளை IIHL நிறுவனம் கைப்பற்ற இருக்கிறது. 1.6 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவுக்கு சொத்துகளை IAMI நிறுவனம் நிர்வகித்து வருகிறது. IIHL நிறுவனம் இண்டஸ் இண்ட் வங்கியின் புரோமோட்டர் நிறுவனமாகும். இந்தியாவில் ஐந்தாவது பெரிய தனியார் வங்கியாகவும் இண்டஸ்இன்ட் நிறுவனம் திகழ்கிறது.
இந்தியாவில் 17 ஆவது பெரிய சொத்து நிர்வகிக்கும் கம்பெனியாகவும் IAMI திகழ்கிறது. IIHL நிஙுவனம் இந்தியா முழுவதும் 11ஆயிரம் கிளைகளை கொண்டுள்ளது. நாடு முழுவதும் நான்கரை கோடி வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது.
1993 ஆம் ஆண்டு எஸ்பி இந்துஜாவால் தொடங்கப்பட்டது. ரிலையன்ஸ் கேப்பிட்டல் நிறுவனத்தினை வாங்கவும் ஐஐஎச்எல் நிறுவனம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி சுகாதாரம், பொதுவான காப்பீடு மற்றும் சொத்து மறு கட்டமைப்பு மற்றும் ஆய்வு உள்ளிட்ட அம்சங்களை ரிலையன்ஸ் கேப்பிடலிடம் இருந்து ஐஐஎச்எல் பெற்றுக்கொள்ளும். இதற்காக தேசிய சட்ட தீர்ப்பாயம் ஒப்புதலையும் அளித்துவிட்டது. இது விரைவில் செயல்திட்டமாக மாற இருக்கிறது.
இந்த இரு நிறுவனங்கள் கூட்டாக இணைந்து செயல்பட இருப்பது குறித்து இரு நிறுவன அதிகாரிகளும் பெருமிதம் தெரிவித்துக்கொண்டனர். இந்தியாவின் மேலும் பல நகரங்களில் தங்கள் சேவையை அளிக்க இந்த கூட்டு நிறுவனம் திட்டமிட்டுள்ளது. IAMI நிறுவனம் கடந்த 2008 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. அப்போது லோட்டஸ் இந்தியா அசெட் மேனேஜ்மென்ட் என்ற கம்பெனியை வாங்கியது. லோட்டஸ் நிறுவனத்தில் ஏற்கனவே 16 லட்சம் வாடிக்கையாளர்கள் இருந்தது குறிப்பிடத் தக்கது. மோட்டிலால் ஆஸ்வால் நிறுவனம் ஐஐஎச்எல் நிறுவனத்தின் நிதி ஆலோசகராகவும், அதேநேரம் பேலே மற்றும் AZB நிறுவனத்தினர் ஐஐஎச்எல் மற்றும் இன்வெஸ்கோ நிறுவனத்தின் சட்ட ஆலோசகராக திகழ்வார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது