ஹிந்துஸ்தான் சிங்க் நிறுவனம் டிவிடெண்ட் அறிவிப்பு !
ஹிந்துஸ்தான் சிங்க் முதலீட்டாளர்களின் ஒரு பங்குக்கு Rs.18 இன்ட்டெரீம் டிவிடெண்டை அறிவித்திருக்கிறது, இதற்கான பதிவு தேதியாக டிசம்பர் 15 இருக்கும், ஒட்டுமொத்தமாக Rs.7605 கோடி முதலீட்டாளர்களுக்கு டிவிடென்ட்டாக வழங்கப்படும், இதில் வேதாந்தா லிமிடெட் நிறுவனத்துக்கு Rs.4938 கோடியும், மத்திய அரசுக்கு Rs.2250 கோடியும் கிடைக்கும்.
இந்துஸ்தான் சிங்க் லிமிடெட் (ஹெச்எஸ்எல்) இந்தியாவை தலைமையிடமாகக் கொண்ட ஒரு நிறுவனமாகும், இது இந்தியாவில் துத்தநாகம், ஈயம் மற்றும் வெள்ளி போன்ற உலோகங்களை சுரங்கத் தொழில் மூலம் பிரித்தல் மற்றும் உருக்குதலில் ஈடுபட்டுள்ளது. காற்றாலை மின் உற்பத்தியிலும் நிறுவனம் ஈடுபட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமாக இருந்து 2003 ஆம் ஆண்டு வேதாந்தா நிறுவனத்துக்கு விற்பனை செய்யப்பட்டது.