உச்சபட்ச வேலைவாய்ப்புகளை வழங்கிய உற்சாக ஜூலை!
நம்ம நாட்ல கொரனாவல மந்தமா இருந்த வேலைவாய்ப்பு உச்சகட்டமா ஜூலை மாசம் 11 சதவீத அதிகரிப்பை கண்டது என்று நௌக்ரி நிறுவனம் நடத்திய சர்வே கூறுகிறது. இது நம்ம நாடு கோவிட் தொற்றிலிருந்து மீண்டு பொருளாதார வளர்ச்சி அடையும் நிலையைக் குறிக்கிறது என்கிறது சர்வே.
ஜூன் மாசத்துல 2,359 வேலைவாப்புகள் இருந்தன; இது ஜூலை மாசம், 2,625 வேலை வாய்ப்புகளாக உயர்ந்தது என்று அந்த சர்வே கூறுகிறது. இதுதான் உச்சகட்ட அதிகரிப்பு என்கிறது நௌக்ரி.
ஏப்ரல், மே க்குப் பிறகு, கோவிட்தொற்றுநோயின் ஆதிக்கம் குறைந்ததால், ஜூனில் வேலைவாய்ப்புகள் 15 சதவீதம் அதிகரித்தது என்று அந்த சர்வே கூறுகிறது. நௌக்ரி ஜாப்ஸ்பீக் (Naukri Jobspeak) மாதம் தோறும் நௌக்ரியில் எவளோ வேலைவாய்ப்புகள் உள்ளன என்பதை குறிக்கும் ஒரு இண்டெக்ஸ்.
ஐடி நிறுவங்களில் வேலைவாய்ப்புகள் மிக அதிக அளவில் உள்ளது என்று அந்த சர்வே கூறுகிறது. ஜூன் மாதத்தை ஜூலையுடன் ஒப்பிடும் போது, வேலைவாய்ப்பில் 18 சதவீத அதிகரிப்பு இருந்தது.
கிட்டத்தட்ட எல்லாத் துறையும் வேலைவாய்ப்பு வழங்குவதில் உச்சத்தை எட்டின என்று நௌக்ரி சர்வே கூறுகிறது. கோவிட் தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட உணவகங்கள், ஏர்லைன்ஸ் போன்ற துறைகள் கூட மேன்மை அடைந்துவிட்டதாக சர்வே மேலும் கூறுகிறது. கல்வி, பேங்கிங் போன்ற துறைகளும் வலுவடைந்தது.
பார்மா, ஊடகம் போன்ற துறைகளில் வேலைவாய்ப்புகள் குறைந்தன என்று சர்வே கூறுகிறது. ஐடி துறைதான் எல்லா துறையுடன் ஒப்பிடும் போது, மிகச் சிறந்த வளர்ச்சி அடைந்ததென்று நௌக்ரியின் தலைமை வணிக அதிகாரி பவன் கோயல் கூறுகிறார். இது இந்திய வணிகங்கள் டிஜிட்டலுக்கு தங்களை தயார் செய்து கொண்டிருக்கிறது என்பதை குறிக்கிறது என்கிறார் கோயல்.
பெங்களூரு, புனே, ஹைதராபாத் போன்ற இடங்களில் வேலைவாய்ப்பு அதிகமாக இருக்கிறது என்கிறது சர்வே. இந்த நகரங்கள் ஐடி நிறுவனங்கள் நிறைந்தவை என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.