வரலாறு படைத்த இந்திய சந்தைகள்…
இந்திய பங்குச்சந்தைகள் நாள்தோறும் புதுப்புது உச்சங்கள் தொட்டு வரலாறு படைத்து வருகின்றன. இந்த வரிசையில் இந்திய சந்தைகள் வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு டிசம்பர் 27ஆம் தேதி உச்சம் தொட்டுள்ளன. அதன்படி வர்த்தகத்தின்போது மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 72 ஆயிரம் புள்ளிகளையும், நிஃப்டி 21,600 புள்ளிகளையும் முதல் முறையாக கடந்திருக்கின்றன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 701 புள்ளிகள் உயர்ந்து 72,038 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவுற்றது. இதேபோல் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 213 புள்ளிகள் உயர்ந்து 21,654 புள்ளிகள் என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளது. தேசிய பங்குச்சந்தையில் மிகப்பெரிய லாபமாக Hindalco Industries, UltraTech Cement, Bajaj Auto, JSW Steel, Tata Motorsஆகிய நிறுவன பங்குகள் லாபத்தை சந்தித்தன. ONGC, NTPC, Adani Enterprises, UPL, Adani Portஉள்ளிட்ட நிறுவனங்கள் சரிவை கண்டன. எண்ணெய் மற்றும் எரிவாயுத்துறை பங்குகள் தவிர்த்து மற்ற அனைத்துத்துறை பங்குகளும் ஏற்றம் கண்டன. 3M India, Amara Raja, Bajaj Auto, Bharat Dynamics, Gallantt Ispat, Guj Themis, HEG, Hindalco Industries, J Kumar Infra, Kansai Nerolac, Kesoram Industries, LIC India, Shanthi Gears, UltraTech Cement உள்ளிட்ட 350க்கும் அதிகமான நிறுவன பங்குகள் 52 வாரங்களில் இல்லாத உச்சம் தொட்டுள்ளன.
பங்குச்சந்தைகள் ஒருபக்கம் உச்சங்களை தொட்டு வரும் நிலையில் தங்கம் விலையும் மீண்டும் உயர்ந்து வருகிறது. ஒரு கிராம் தங்கம் முன்தின விலையைவிட 5 ரூபாய் அதிகரித்துள்ளது. ஒரு கிராம் தங்கம் 5900 ரூபாயாக இருக்கிறது.
ஒரு சவகன் தங்கம் 47,200 ரூபாய்க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலை கிராமுக்கு 30 காசுகள் குறைந்து 80 ரூபாய் 70 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்டது. கட்டி வெள்ளி விலை கிலோவுக்கு 300 ரூபாய் குறைந்து 80 ஆயிரத்து 700 ரூபாயாக விற்கப்படுகிறது. இந்த விலைகளுடன் நிலையான ஜிஎஸ்டி 3விழுக்காடும், செய்கூலி, சேதாரமும் சேர்க்கவேண்டும். இதில் செய்கூலி, சேதாரம் கடைக்கு கடை மாறுபடும் என்பதை நகை வாங்குவோர் கவனத்தில் கொள்ள வேண்டும்.