7ம் அறிவு படுத்தும் பாடு…
வடிவேலு போகிற போக்கில் நாயை சூ என்று சொல்லும்படி பாட்டியம்மா ஒருவர் கூறுவதைப்போல அமெரிக்காவிலும் சும்மா இல்லாமல் ஒரு சில விஷமிகள் செயற்கை நுண்ணறிவு உதவியுடன் ஒரு போட்டோவை வெளியிட்டனர். இதனால் அமெரிக்க பங்குச்சநதைகளில் சரிவு காணப்பட்டது. அப்படி என்ன புகைப்படம் என்று நீங்கள் கேட்பது புரிகிறது. அமெரிக்காவின் பாதுகாப்பு குறித்த தகவல்களை வெளியிடும் நிறுவனம் பெண்டகன், இந்த அமைப்பின் கட்டடம் சில ஆண்டுகளுக்கு முன்பு இரட்டை அடுக்குகளாக இருந்தது. அதில் விமானத்தை மோதவைத்து வெடிவைத்து தகர்க்கப்பட்டது. இதேபோல் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி, பெண்டகனின் வாசலில் கரும்புகை வெளியாவது போல சித்தரிக்கப்பட்டது இந்த புகைப்படங்கள் சர்ச்சையை ஏற்படுத்தின. எனினும் சில நிறுவனங்களும் இதனை சரிபார்க்காமல் செய்தியாக பரப்பினர். இதனால் அமெரிக்க பங்குச்சந்தைகள் 0.26 விழுக்காடு சரிந்தது. எனினும் 4 நிமிடங்களில் அந்த சரிவு சரி செய்யப்பட்டது. அர்லிங்க்டன் காவல்துறையினர் இப்படி ஒரு சம்பவம் நடக்கவே இல்லை என்று உறுதிபடுத்தியதும்தான் புகைவந்ததாக வெளியான போட்டோ போலி என்பது தெரியவந்தது. செயற்கை நுண்ணறிவு அம்சங்கள் எல்லா துறைகளிலும் வேலையிழப்பு பீதியை ஏற்படுத்தி வரும் சூழலில் இந்த புதிய அம்சம் பெரிய தலைவலியை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் எது உண்மை,எது பொய் என்று நம்ப முடியாத அளவுக்கு ஏ.ஐ அத்தனை திறமையாக வேலை செய்கிறது. ஏ.ஐ.துறையில் உள்ள பிரச்னைகளை களைய வேண்டும் என்றும் அதில் உள்ள அம்சங்களை நெறிபடுத்த வேண்டும் என்றும் பல டெக் நிறுவனங்கள் கூறியள்ளன. முழுவதுமாக ஏ.ஐ நுட்பத்தை தவிர்க்காமல் லேசான அளவில் அதனை பயன்படுத்த வேண்டும் என்றும் பிரிட்டிஷ் கம்பியூட்டர் சொசைட்டி கேட்டுக்கொண்டுள்ளது.