வீட்டு உபயோக பொருட்கள் சந்தை உயர்வு..
வீட்டு உபயோக பொருட்கள் சந்தை உயர்வு.. சோப்பு, சீப்பு, ஷாம்பு உள்ளிட்ட மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களுக்கு சந்தையில் வேகமாக விற்பனையாகும் பொருட்கள் என்று பெயர். இந்த நிறுவனங்களின் வளர்ச்சி அண்மையில் மிகவும் குறைவாக இருந்தது. அதாவது மக்களின் தேவை குறைந்திருந்ததாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் 2025 நிதியாண்டின் முதல் காலாண்டில், நிலையான வளர்ச்சி இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. சிகரெட், மது மற்றும் நகை தயாரிப்பு நிறுவனங்கள் அதிக வளர்ச்சியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெயிண்ட்,காலணிகள் உள்ளிட்ட பொருட்களும் சந்தையில் வேகமாக தேவைப்படுகின்றன. Honasa Consumer, Tata Consumer Products, Nestle India, Colgate Palmolive,Jyothy Labs உள்ளிட்ட நிறுவனங்கள் அதிகம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. அதேபோல் Dabur, Marico, Britannia Industries, Godrej Consumer Product ஆகிய நிறுவனங்கள் அதிக எதிர்பார்ப்பில் அடுத்த கட்டத்தில் உள்ளன.
அதே நேரம் இந்துஸ்தான் யுனிலிவர் நிறுவனம் பெரிய அளவில் ஏற்றம் இல்லை என்ற அறிக்கை தர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஐடிசி நிறுவனம் 5.6% வளர்ச்சியும், 2.6% ஆண்டுக்கு ஆண்டு லாபமும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதன் FMCG எனப்படும் சந்தையில் வேகமாக விற்பனையாகும் பொருட்கள் விற்பனை 7 விழுக்காடு வரை ஆண்டுக்கு ஆண்டு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்துஸ்தான் யுனிலிவரின் நிகர லாபம் 1.4%மட்டுமே இருக்கும் என்றும்
நெஸ்ட்லே நிறுவனத்தின் முதல் காலாண்டு வருவாய் 10 % இருக்கும் என்றும், ஏற்றுமதி 20%ஆக இருக்கும் என்றும் கணிக்கப்படுகிறது. பிரிட்டானியாவின் வருவாய் 5 %, டாபரின் வளர்ச்சி 6.4 %ஆக இருக்கும் என்றும் கோடக் ஈக்விட்டீஸ் நிறுவனம் கணித்துள்ளது.