SONY HONDA கூட்டணி – பறக்க தயாராகும் EVகள்..!!
Honda நிறுவனம் Sony-யுடன் இணைந்து எலக்ட்ரிக் வாகனங்களை உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளது.
சோனி நிறுவனம் எலக்ட்ரானிக் பொருட்கள் தயாரிப்பில் மிகவும் புகழ் பெற்ற நிறுவனமாக உள்ளது.
ஹோண்டா நிறுவனம் ஏற்கனவே இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்களை தயாரித்து வருகிறது.
இந்நிலையில், சோனியும், ஹோண்டாவும் கூட்டாக இணைந்து எலக்ட்ரிக் வாகனங்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளதாகவும், இதன் தயாரிப்புகள் 2025-ம் ஆண்டு முதல் சந்தைகளில் விற்பனைக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆட்டோ மொபைல் உற்பத்தி, தொழில்நுட்பம் மற்றும் விற்பனைத் திறன், சோனியின் இமேஜிங், தகவல் தொழில்நுட்பம் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை ஒருங்கிணைக்க இரண்டு நிறுவனங்களும் முடிவு செய்துள்ளன. இந்த தயாரிப்புகள் அனைத்தும் ஹோண்டா ஆலையில் உருவாக்கப்பட உள்ளது.
வரலாற்று மற்றும் கலாச்சார சிறப்பம்சங்களை கொண்ட நிறுவனங்களாக ஹோண்டா, சோனி உள்ளன. இவற்றின் தொழில்நுட்ப திறன்கள் முழுவதும் வேறுபட்டவை. வருங்காலத்துக்கு தேவையான சிறப்பான போக்குவரத்தை ஏற்படுத்த இரண்டு நிறுவனங்களின் கூட்டணி உதவும் என ஹோண்டா நிறுவன அதிகாரியான டொஷிரோ மிபே தெரிவித்துள்ளார்.