திகிக்கும் தங்கம் விலை
ஜூலை 29ஆம் தேதி சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு 120 ரூபாய் அதிகரித்துள்ளது. ஒரு சவரன் தங்கம் 44,520 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் 15 ரூபாய் அதிகரித்து 5565 ரூபாயாக உயர்ந்திருக்கிறது. கடந்த சிலநாட்களாக ஏற்ற இறக்கங்களை சந்தித்துவரும் தங்கம் சனிக்கிழமை உயர்ந்துள்ளது. வழக்கமாக சனிக்கிழமைகளில் சற்று விலை அதிகமாகத்தான் இருக்கும் என்பதை நிரூபிக்கும் வகையில் இந்த விலையேற்றம் மீண்டும் தனது முகத்தை காட்டியுள்ளது. தங்கம்தான் விலையேறுகிறது என்று பலரும் வெள்ளியை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். வெள்ளி விலை கிராமுக்கு 50 காசுகள் அதிகரித்து 80 ரூபாயாக மாறியுள்ளது. இதே விலை 28ஆம் தேதி 79 ரூபாய் 50 காசுகளாக இருந்தது. தற்போது வெள்ளி விலையும் கூடியுள்ளதால் நடுத்தர மக்களுக்கு ஆபரணங்கள் மீது வெறுப்பு அதிகரித்துள்ளது. கட்டி வெள்ளி விலை கிலோவுக்கு 500 ரூபாய் அதிகரித்து 80 ஆயிரம் ரூபாயாக உயர்ந்துள்ளது. சர்வதேச அளவில் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 1959 டாலராக உள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு இதே தங்கம் 1905 டாலர்களாக விலை வீழ்ந்திருந்தது. டாலரின் மீதான முதலீடு அதிகரிப்பு மற்றும் அமெரிக்க பெடரல் ரிசர்வின் வட்டி உயர்வு உள்ளிட்ட காரணிகளால் அமெரிக்காவில் தங்கம் விலையேறி வருகிறது.இதன் பிரதிபலிப்பாகவே சென்னையிலும் தங்கம் விலை உயர்ந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும். மேலே கூறிய தங்கம், வெள்ளி விலைகளுடன் கட்டாயம் 3 விழுக்காடு ஜிஎஸ்டி செலுத்த வேண்டும், மேலும் செய்கூலி,சேதாரம் தனியாக இருக்கிறது. அதையும் சேர்த்தால்தான் உண்மையான தங்கம் ,வெள்ளி விலை தெரியும். இதில்ஜிஎஸ்டி 3 விழுக்காடு பெரிதாக எந்த கடைகளிலும் மாறாது. ஆனால் செய்கூலி,சேதாரம் கடைக்கு கடை மாறும் என்பது குறிப்பிடத்தக்கது