அனுமதியின்றி சேவைக் கட்டணம் – நுகர்வோர் ஆணையம் எச்சரிக்கை
வாடிக்கையாளர் ஒப்புதல் இல்லாமல் சேவைக் கட்டணத்தை பில்லில் சேர்ப்பதற்கு மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் தடைவிதித்தது.
ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களில் வாடிக்கையாளர் அனுமதியின்றி சேவைக் கட்டணத்தைச் சேர்ப்பதைத் தடுக்க மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
அதன்படி, வாடிக்கையாளரிடம் இருந்து சேவைக் கட்டணத்தைக் கோர எந்த ஹோட்டல் அல்லது உணவகத்திற்கும் உரிமை இல்லை. உணவுக் கட்டணத்தில், மொத்தத் தொகையுடன் ஜிஎஸ்டியைச் சேர்ப்பதன் மூலம் சேவைக் கட்டணத்தை வசூலிக்க முடியாது என்பது உள்பட சில வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது
அத்துடன் நுகர்வோர் பாதிக்கப்பட்டால் 1915 என்ற எண்ணிலோ அல்லது என் சி எச் என்ற செயலி மூலம் புகாரளிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.