கிரிடிட் கார்டில் வீட்டு வாடகை பல நிறுவனங்கள் நிறுத்தி வைப்பு..
கிரிடிட் கார்டுகள் மூலம் வீட்டு வாடகை செலுத்தினால் ஒரு பரிவர்த்தனைக்கு 3 ஆயிரம் ரூபாய் வரை கூடுதல் கட்டணம் விதிக்கப்படும் என்று எச்டிஎப்சி வங்கி தெரிவித்துள்ளது. பிரத்யேகமாக கடன் செயலிகள் தற்போது கிரிடிட் கார்டுகள் மூலம் வீட்டு வாடகை தரும் பிரிவை நிறுத்தி வைத்துள்ளனர். திடீரென இப்படி நிறுத்த காரணம் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக கிரெட்,மோபிகிவிக், பேடிஎம் உள்ளிட்ட செயலிகள் வாயிலாக வீட்டு வாடகை செலுத்தினால் அதற்கு 1 பரிவர்த்தனைக்கு 3 ஆயிரம் ரூபாய் வரை அதாவது 1 விழுக்காடு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட இருக்கிறது. இதை எச்டிஎப்சி நிறுவனம் தனது கிரிடிட் கார்டு வாடிக்கையாளர்களுக்கு மின்னஞ்சல் மூலமாகவும் தெரிவித்துள்ளது. ரிசர்வ் வங்கி எந்த வங்கிகளையும் கிரிடிட் கார்டுகளில் வீட்டு வாடகை தரவேண்டாம் என்று கூறவில்லை. அதேநேரம் வங்கள் தாங்களாகவே இதற்கு ஒரு முடிவெடுத்து கட்டணம் வசூலித்து வருகின்றன. இந்தியாவில் கடன் வாங்கி கடனை கட்டும் செயலில் 10 விழுக்காடு அளவுக்கு வாடகைதான் செலுத்தப்படுகிறது. இது கிட்டத்தட்ட பர்சனல் லோனுக்கு சமம் என்கிறார்கள் வங்கித்துறை அதிகாரிகள். வணிகர்களாக இருந்தால் மட்டும்தான் கிரிடிட்கார்டுகளை பயன்படுத்த முடியும் என்ற நிலையில் வீட்டு உரிமையாளர்கள் வணிகர்கள் இல்லை என்றும் தெரிவித்தனர். வீட்டு வாடகையை கிரிடிட் கார்டு மூலம் கட்ட மக்கள் முன்வருவதற்கு பிரதான காரணம் வட்டி இல்லாமல் 45-50 நாட்கள் இருக்க முடியும் என்பதே. இது வங்கிகளுக்கு தேவையில்லாத தலைவலியை தருகிறது. அமெரிக்காவில் இதே பாணியில் வெல்ஸ் பார்கோ என்ற வங்கியே திவாலாகிப்போனது. இதனால் இந்தியாவில் வங்கிகள் அச்சத்தில் கட்டணம் வசூலிக்கின்றனர் என்பதே பலரின் கருத்தாக இருக்கிறது.