வீட்டு சேமிப்புகள் கரைந்துவிட்டதாம்…
இந்தியாவில் 80,90களில் வீடுகளில் கடுகு டப்பாக்கள் மினி வங்ககள் போல செயல்பட்டு வந்தன. அம்மாக்கள் சேமித்து வைத்த பணம், கடுகுடன் பணவாசமும் வீசி வந்தது. இந்த நிலையில் தற்போது வீடுகளில் சேமித்து வைக்கும் பணம் பல ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிந்துள்ளதாக ரிசர்வ் வங்கி சுட்டிக்காட்டியுள்ளது. தங்கள் தேவைகளை வாங்கிக்கொள்ள மக்கள் கடன் வாங்கத்தான் அதிக ஆர்வம் காட்டுவதாகவும் அதிர வைக்கிறது ரிசர்வ்வங்கி. 2021ஆம் ஆண்டு சராசரியாக வீடுகளில், உள்நாட்டு உற்பத்தியில் 11.5 விழுக்காடாக இருந்த சேமிப்பு தற்போது 7.2%ஆக அடுத்த ஆண்டு சரிந்துள்ளதாகவும், 2023-ல் இது 5.1%ஆக சரிந்துவிட்டதாக ரிசர்வ் வங்கி சுட்டிக்காட்டுகிறது. வங்கிகளுக்கு பணம் செலுத்து வைக்கப்படும் நிதி, சீட்டுப்பணம் கட்டுவது போக சேமித்து வைப்பதை வீட்டு நிதி என அழைக்கலாம். வங்கிகளில் சேமிப்பு,நிதிநிறுவனங்களில் சேமிப்பு மற்றும் ஆயுள் காப்பீடு,வருங்கால வைப்பு நிதி,ரொக்கப்பணம் மற்றும முதலீடுகள் சொத்துகளாக கணக்கிடப்படும். இவையும் சரிவதாக தெரியவந்திருக்கிறது.இந்தியாவின் மொத்த வீட்டு சேமிப்பு விகிதம் 2022-23 காலகட்டத்தில்தான் 5.1விழுக்காடாக குறைந்திருக்கிறதாம்.இது கடந்த 23 ஆண்டுகளில் இல்லாத குறைவான அளவு என்கிறது ரிசர்வ் வங்கி,கடந்த 2015 வரை மக்கள் தங்கள் வீட்டு சேமிப்பை 7.1விழுக்காடு என்ற அளவில் வைத்திருந்த நிலையில் தற்போது அதிகம் செலவிட்டு இருப்பது ரிசர்வ் வங்கியின் தரவுகளில் தெரிய வந்திருக்கிறது.