இவங்களுக்கு மட்டும் எப்படி கடன் கிடைக்குது!!!!
உலகளவில் பெரிய பணக்காரர்களில் ஒருவராக திகழும் கவுதம் அதானி, தனது நிறுவனத்துக்காக அடுத்தாண்டு 10 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவுக்கு கடன் பெற திட்டமிட்டுள்ளார். இருப்பதிலேயே குறைவான வட்டியில்எங்கு கிடைக்கும் என்று அந்த நிறுவனம் தேடி வருகிறதுவெளிநாட்டு கரன்சிகள் மற்றும் பசுமைப்பத்திரங்களை வைத்து நிதி வசூலிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதுடிசம்பருடன் முடியும் காலாண்டிலேயே இந்த கடன் பெறும் முயற்சி துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறதுமொத்தமாக உள்ள கடன் சுமையை குறைக்கவே அதானி இத்தகைய முயற்சிகளை கையில் எடுத்துள்ளார் என்கிறார்கள்நிபுணர்கள்.இந்தியாவில் இந்த கடனை வாங்காமல் சிங்கப்பூர் நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல் கசிந்துள்ளதுஎத்தனை பெரிய தொகை வாங்கினாலும் கடன் அளவு குறைவாகவே உள்ளது என அதானி குழுமம் தனது நிலைப்பாட்டில் தெளிவாக உள்ளதுபாண்ட்களை விற்பதன் மூலம் முதலீட்டாளர்களுக்கு லாபம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.2024ம் ஆண்டு முடிவடையும் கடன் பத்திரம் வெளியீட்டு தேதியில் இருந்ததைவிட தற்போது 3 மடங்கு நிதி அதிகமாக உள்ளதுஇதேபோல் 2029ம் ஆண்டு முடிவடையும் பாண்ட்களில் 9.4% லாபம் கிடைத்துள்ளது. மிகச்சவாலான பங்குச்சந்தையில் அதானி பத்திரங்களை வைத்து கடன் வாங்குவதும் அந்த நிறுவனம் உயிர்ப்போடு இருக்க உதவும் என்கிறார்கள் நிபுணர்கள்.