இந்தியாவின் மதிப்பு எப்படி இருக்கிறது?
ஃபிட்ச் என்ற ரேட்டிங் நிறுவனம் அண்மையில் தனது புதிய புள்ளி விவிரத்தை வெளியிட்டுள்ளது. அதில் இந்தியாவின் வளர்ச்சி உலக பொருளாதாரத்தின் பிம்பம் போல இருப்பதாக கூறியுள்ளது. அதாவது உலகில் ஏதேனும் பெரிய பிரச்னைகள் வந்தால் அதன் தாக்கம் இந்திய சந்தைகளிலும் பிரதிபலிக்கிறது என்று மறைமுகமாக சுட்டிக்காட்டியுள்ளது. ஆனால் அதே நேரம் வளர்ச்சியின் அடிப்படையில் இந்தியா மற்ற நாடுகளை விட மிகச்சிறப்பான இடத்தில் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதே நிறுவனம் இந்தியாவில் உள்ள பற்றாக்குறைகளையும் சுட்டிக்காட்டியுள்ளது. பொது நிதி மேலாண்மை,கடன்களில் மற்ற நாடுகளை விட இந்தியாவில் அதிகம் என்றும் குறிப்பிட்டுள்ளது. அந்த நிறுவனம் கடன் வாங்கும் நிறுவனங்களை பல்வேறு நிலைகளில் வகைப்படுத்துகின்றது. அதன்படி கடந்த 2006ம் ஆண்டு இந்த நிறுவனம் இந்தியாவை BBBஎன்ற பிரிவில் வைத்திருந்தது. மீண்டும் தற்போது அதேபிரிவில்தான் வைத்திருக்கிறது.முதலீட்டுக்கு மிக குறைந்த புள்ளிகளாக BBB பார்க்கப்படுகிறது.பல இடங்களில் இந்தியாவை பாராட்டி பேசியுள்ள அந்த நிறுவனம், போகிற போக்கில் கலாய்த்தும் தள்ளியுள்ளது. இந்தியாவின் பணம் வளரும் விகிதம்6 விழுக்காட்டுக்கும் அதிகமாக இருக்கும் என்று அந்த நிறுவனம் கூறியுள்ளது. உலகளவில் பணவீக்கம் அதகளவில் இருப்பதாக கூறியிருக்கும் அந்த நிறுவனம் உலகளவில் அதிக வட்டி விகிதமம், குறைந்துவரும் கொரோனா சார்ந்த தேவைகள், உள்ளிட்ட அம்சங்களை சுட்டிக்காட்டி, இந்தியாவின் வளர்ச்சி 7 விழுக்காடு அளவுக்கு இருந்திருக்கும் ஆனால் இந்த காரணிகளால் 6 விழுக்காடு அளவுக்குத்தான் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.