எவ்வளவு பேர் ஐ.டி. ஃபைல் செய்திருக்கிறார்கள் தெரியுமா?
2022-23 நிதியாண்டில் மட்டும் இதுவரை (ஜூலை 30 ) வரை 5 கோடியே 83 லட்சம் பேர் தங்கள் வருமான வரியை தாக்கல் செய்திருக்கின்றனர் என்று நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த அளவு என்பது கடந்தாண்டு ஜூலை 31 ஆம் தேதி பதிவானதைவிடவும் அதிகமாகும். இந்த தரவானது 30ஆம் தேதி பகல் 1 மணி வரை மட்டுமே. இன்னும் கடைசி நாளான 31ஆம் தேதி அடித்துப்பிடித்து கணக்கு தாக்கல்செய்வோரின் எண்ணிக்கையும் இருக்கிறது. ஞாயிற்றுக்கிழமை 1 நாளில் மட்டும் 46 லட்சம் பேர் தங்கள் கணக்குகளை தாக்கல் செய்ய லாகின் செய்திருக்கின்றனர். சனிக்கிழமை மட்டும் 1 கோடியே 78 லட்சம் பேர் தங்கள் வருமான வரியை பதிவு செய்ய லாகின் செய்திருக்கின்றனர். வருமான வரி தாக்கல் செய்ய கடைசி நாள் ஜூலை 31ஆம் தேதி என்பதால் மாதச்சம்பளம் பெறும் பெரும்பாலானோர் தங்கள் கணக்குகளை கடைசி நேரத்தில் தாக்கல் செய்து வருகின்றனர். ஜூலை30ஆம் தேதி ஒரே நாளில் பகல் 1 மணி வரை மட்டும் 10லட்சத்து 39 ஆயிரம் பேர் தாக்கல் செய்துள்ளனர். ஞாயிற்றுக்கிழமை 1 மணி நேரத்தில் மட்டும்(12-1)மணி வரை மட்டும் 3 லட்சத்து 04 ஆயிரம் பேர் தங்கள் வருமானவரியை பதிவு செய்திருக்கின்றனர் என்கிறது மத்திய அரசின் புள்ளிவிவரம்