யாருக்கு எவ்வளவு..?
மத்திய பட்ஜெட்டில் அதிகபட்சமாக பாதுகாப்புத் துறைக்கு 5 லட்சத்து 94 ஆயிரம் கோடி கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறைக்கு 2 லட்சத்து 70 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. ரயில்வே துறைக்கு 2 லட்சத்து 41 ஆயிரம் கோடி ரூபாயும், நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத் துறைக்கு 2 லட்சத்து 6 ஆயிரம் கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், உள்துறை அமைச்சகத்துக்கு ஒரு லட்சத்து 96 ஆயிரம் கோடி ரூபாய், ரசாயனம் மற்றும் உரத் துறைக்கு ஒரு லட்சத்து 78 ஆயிரம் கோடி ரூபாய், ஊரக வளர்ச்சித் துறைக்கு ஒரு லட்சத்து 60 ஆயிரம் கோடி ரூபாய், வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத் துறைக்கு ஒரு லட்சத்து 25 ஆயிரம் கோடி ரூபாய், தகவல் தொடர்புத் துறைக்கு ஒரு லட்சத்து 23 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பிரதமரின் வீட்டுவசதித் திட்டத்துக்கு நடப்பு நிதியாண்டில் 48 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்ட நிலையில், அடுத்த நிதியாண்டில் 79 ஆயிரத்து 590 கோடி ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஜல்ஜீவன் திட்டத்துக்கான நிதி 60 ஆயிரம் கோடி ரூபாயிலிருந்து 70 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மின்சார வாகனங்கள் உற்பத்தி மற்றும் வேகமான பயன்பாட்டுக்கான திட்டத்துக்கு 2 ஆயிரத்து 908 கோடியிலிருந்து 5 ஆயிரத்து 172 கோடியாக உயர்ந்துள்ளது. அதேநேரம், மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்துக்கான ஒதுக்கீடு 89 ஆயிரத்து 400 கோடி ரூபாயிலிருந்து 60 ஆயிரம் கோடி ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.