எந்த பொருளுக்கு எவ்வளவு ஜிஎஸ்டி மாற்றம்?
மத்திய பட்ஜெட் இன்னும் ஓரிரு வாரங்களில் தாக்கல் செய்யப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் பட்ஜெட்டுக்கு முன்பு, பல தரப்பு நிர்வாகிகளுடன் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆலோசனை மேற்கொண்டார்.
இந்நிலையில் கடந்த சனிக்கிழமை ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கல்வி நிலையங்களில் இல்லாமல் ஹாஸ்டலில் தங்குவதற்கு 20 ஆயிரம் ரூபாய் வரை ஜிஎஸ்டியில் சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளது. இதேபோல் ரயில்வே தங்கும் அறை, காத்திருப்பு அறை, நடைமேடை கட்டணங்களுக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ரயில்வேவுக்குள்ளேயே இயங்கும் பேட்டரி வாகனங்களுக்கும் ஜிஎஸ்டி கிடையாது. பால் கேன்களுக்கு 12 விழுக்காடு வரியும், விதிக்கப்பட்டுள்ளது. மாநிலங்களுக்கு உரிய நேரத்தில் ஜிஎஸ்டி நிலுவைத் தொகை அளிப்பதன் மூலம் இந்தியாவில் வளர்ச்சி ஊக்கப்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. சில சீர்திருத்தங்களை செய்வதற்காக 50 ஆண்டுகள் வட்டியில்லா கடன்களை மத்திய அரசு வழங்க இருப்பதாகவும்,இதனை மாநிலங்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கேட்டுக்கொண்டார்.