IDFC டிவிடண்ட் எவ்வளவு?
பிரபல வங்கிகளில் ஒன்றான ஐடிஎப்சி வங்கி, தனது இடைக்கால டிவிடண்ட்டாாக 10 விழுக்காடு அளிப்பதாக அறிவித்துள்ளது. அதாவது அந்த நிறுவனத்தின் ஒரு பங்குக்கு 1 ரூபாய் டிவிடண்ட் அளிக்கப்பட உள்ளது. டிவிடண்ட் என்பது பங்குகளை வாங்கி வைத்திருக்கும் பங்குதாரர்களுக்கு வழங்கப்படும் ஒரு பணப் பரிசாகும். டிவிடண்ட் அளிப்பது தொடர்பாக அந்த நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு அமர்ந்து பேசி இறுதி முடிவு எடுத்துள்ளனர். அதன்படி ஜூலை 16 ரெக்கார்ட் டேட்டாக இருக்கிறது. இடைக்கால டிவிடண்ட் என்பது ஜூலை 23 ஆம் தேதி அளிக்கப்பட இருக்கிறது. ஜுலை 4 ஆம் தேதி நிலவரப்படி ஐடிஎப்சி நிறுவனத்தின் ஒரு பங்கின் விலை 120 ரூபாய் 26 காசுகளாக உள்ளது. அந்த நிறுவனத்தின் சந்தை மூலதனம் என்பது 19,241 கோடி ரூபாயாக தேசிய பங்குச்சந்தையில் இருக்கிறது. கடந்த 52 வாரங்களில் அந்த நிறுவனத்தின் அதிகபட்ச விலை 137 ரூபாயாகவும், குறைந்தபட்சமாக 105 ரூபாயும் சென்றுள்ளன. இந்த பங்கின் முகப்பு விலை அதாவது பேஸ் வேல்யு 10 ரூபாயாகும். ஐடிஎப்சி நிறுவனம் தொடர்ந்து டிவிடண்ட் அளிப்பதில் பெயர் பெற்ற நிறுவனமாக உள்ளது. கடைசியாக அந்த நிறுவனம் கடந்தாண்டு பிப்ரவரியில் ஒரு பங்குக்கு 11 ரூபாய் டிவிடண்ட்டாக அளித்தது. இதேபோல் கடந்த 2022-ல் ஒரு பங்குக்கு 1 ரூபாய் அளிக்கப்பட்டது. இதேபோல் கடந்த 2019-ல் ஒரு பங்குக்கு 65 பைசா டிவிடண்ட் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.