எவ்வளவு பணம் இருந்தால் நீங்கள் பணக்காரன்?
உலகளவில் பெரிய பணக்காரர்களாக வெறும் 1 விழுக்காடு மக்கள் மட்டுமே இருக்கின்றனர்.அவர்களுக்கு நிகரான பணம் சேர்க்க எவ்வளவு பணம் தேவை என்பது பற்றி knight Frank நிறுவனம்ஆய்வு நடத்தியது. அதன் புள்ளி விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதாவது உலகளவில் பெரும்பணம் படைத்தவர்களுக்கு நிகராக பணம் இருக்க வேண்டுமானால் மக்களின் வருவாய் 8 இலக்க வருமானமாக இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது மெடிடேரியன் பகுதியில் இருக்க 12.4 பில்லியன் அமெரிக்க டாலரும்,ஸ்விட்சர்லாந்தில் வசிக்க 6.6 மில்லியன் டாலரும்,ஆஸ்திரேலியாவில் இருக்க 5.5 மில்லியன் அமெரிக்க டாலர்கள் பணமும் தேவைப்படுகிறது என்கிறது அந்த நிறுவனம், ஏழைகளுக்கும், பணக்காரர்களுக்கும் இடையே உள்ள இடைவெளி அதிகரித்தபடியே இருப்பதாக கூறியுள்ள அந்த நிறுவனம், கொரோனா காலகட்டத்தில் செலவுகள் அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள அந்த நிறுவனம்,பிலிப்பைன்சில் வசிக்கும் நபரை விட மொனாக்கோவில் வசிக்கும் நபர் கிட்டத்தட்ட 200 மடங்கு பணக்காரராக இருப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த நிறுவனம் வெளியிட்ட புள்ளி விவரத்தின்படி, 25 நாடுகளின் கணக்கெடுப்பு மட்டுமே நடத்தப்பட்டுள்ளது. இதில் பிலிப்பைன்சுக்கு கடைசி இடம் கிடைத்துள்ளது. குறைந்த வருவாய் கொண்ட நாடுகள் பணவீக்கத்தால் மிகப்பெரிய சிக்கலை சந்தித்து வருவதாக கூறியுள்ள அந்த ஆய்வு நிறுவனம்,பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பர்க்கின் சொத்து அதிகமாக உயர்ந்துள்ளதாக கூறியுள்ளது. அதிக பணம்படைத்தவர்களுக்கும் மிக ஏழைகளுக்கும் சமமாக இல்லாமல் அதிக பணம் சம்பாதிப்போருக்கு அதிக வரி விதிக்கவும் திட்டம் வகுக்க கோரிக்கை எழுந்துள்ளது.