நாடே நஷ்டத்துல இருக்கு எப்படிங்க சம்பளம் தருவது: பங்காளி நாட்டுக்கு வந்த சோதனை
கடும் நிதி நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் பாகிஸ்தானில் அரசுத்துறையில் பணியாற்றுவோர், நிலுவையில் உள்ள திட்டங்களுக்கான பணம் உள்ளிட்ட அம்சங்களை நிறுத்தி வைக்க அந்நாட்டு அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.அடுத்த அறிவிப்பு வரும்வரை பாகிஸ்தானில் பொருளாதார நிதி புழக்க நடவடிக்கைகளுக்கு அரசு கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. பாகிஸ்தானில் கடந்த சில நாட்களாக இருந்த வெளிநாட்டு பண கையிருப்பு 2.9பில்லியன் டாலரில் இருந்து சற்று உயர்ந்து 4 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. பணத்தை பிரித்து பிற துறைகளுக்கு அளிக்கும் அதிகாரிகளுக்கு நிதியமைச்சகம் சுற்றறிக்கை விடுத்துள்ளது. அந்நாடு தற்போது சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை வழிமேல் விழிவைத்து எதிர்நோக்கியுள்ளது. ஐஎம்எப் நிதியை பெற புதிதாக மினி பட்ஜெட் ஒன்றும் தயாராகி வருகிறது. அதன்படி வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கார்கள்,வீட்டு உபயோக பொருட்கள்,சாக்லேட் மற்றும் அழகுசாதன பொருட்களின் விற்பனை வரி 17-ல் இருந்து 25 % ஆக உயர்த்தப்படுகிறது. பாகிஸ்தான் நாட்டின் வாராந்திர பணவீக்கம் கடந்த வாரம் 2.78% உயர்ந்து 41.54%ஆக உள்ளது.அண்மையில்தான் அந்த நாட்டில் பெட்ரோல்,டீசலின் விலை 2 மடங்காக உயர்த்தப்பட்டது. மின்சாரம், எரிவாயு மற்றும் சமையல் கேஸ் விலையை உயர்த்தினால் கொஞ்சம் காசு புழங்கும் என்ற யோசனையின்படியே இந்த செயல்கள் அந்நாட்டில் செய்யப்பட்டுள்ளன. ஆனால் பெரும்பாலானோர் 10 பொருட்கள் வாங்கிய இடத்தில் 4 பொருட்கள் வாங்கும் அளவுக்கு தேவைகளை குறைத்துக் கொண்டனர்.