ஈரான்-இஸ்ரேல் போர் எப்படி இந்திய சந்தையை பாதிக்கும்?
ஈரான்-இஸ்ரேல் இடையே நடந்து வரும் போர்ப்பதற்ற சூழல் காரணமாக திங்கட்கிழமை பங்குச்சந்தைகளில் பாதிப்பு இருக்கும் என்று அஞ்சப்படுகிறது. கடந்த வெள்ளிக்கிழமை மும்பை பங்குச்சந்தையில் 800 புள்ளிகள் வரை சரிவு காணப்பட்டது. இதனால் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் கவலை அடைந்தனர். இதே நிலை திங்கட்கிழமையும் தொடரும் என்று கூறப்படுகிறது. உலக பொருளாதார நிலைகளை கண்காணிப்பது அதிகம் இருக்கும் என்றும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். அடுத்து வரும் நாட்களில் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 100 டாலர் வரை கூட எட்டும் என்றும் கூறப்படுகிறது. சூயஸ் கால்வாய் தடுத்து நிறுத்தப்பட்டால் உலகளவில் பெரிய பொருளாதார மந்த நிலை ஏற்படும் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர். அத்தியாவசிய பொருட்கள் விலை அதிகரிப்பு, பணவீக்கத்தை அதிகரிக்கும் என்றும் மிகவும் எதிர்பார்த்த வட்டி விகிதம் குறைப்பு தாமதமாகலாம் என்றும் கூறப்படுகிறது. சிறிய ரக,நடுத்தர பங்குகளில் முதலீடு செய்வதற்கு முதலீட்டாளர்கள் முன்வர மாட்டார்கள் என்றும் பெரிய அளவுள்ள பங்குகளே அழகு என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
உயர்ந்த அளவில் பங்குகள் விற்கும்போது வாங்குவதை தவிர்க்கலாம் என்றும், அதிகம்பேர் லாபத்தை பதிவு செய்வதிலேயே குறியாக இருப்பார்கள் என்பதால் அதற்கு ஏற்ப சமயோசிதமாக எடுத்துக் கொள்வது சிறந்தது என்பது நிபுணர்கள் கருத்தாக உள்ளது.