ரிலையன்சில் பெரிய தொகை முதலீடு !!!
மிகப்பெரிய வியாபார சாம்ராஜ்ஜியத்தை கொண்டுள்ளது ரிலையன்ஸ் குழுமம். இந்த குழுமத்தில் ரிலையன்ஸ் ரீட்டெயில் என்ற உட்பிரிவு உள்ளது.RRVL எனப்படும் இந்த நிறுவனத்தில் பிரபல கத்தார் முதலீட்டு நிறுவனமான QIA முதலீடு செய்திருக்கிறது. அதாவது 0.99%அளவு பங்குகளை QIA நிறுவனம் வாங்கிக்கொள்ளும், இந்த 1 விழுக்காடு பங்கு மட்டுமே 8,278 கோடி ரூபாயாகும். இந்திய பொருளாதாரம் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் மீது நம்பிக்கையின்பேரில் QIAஇந்த முதலீடுகளை செய்திருப்பதாக RRVL இயக்குநர் இஷா அம்பானி கூறியுள்ளார்.RRVL நிறுவனத்தின் நிதி ஆலோசகராக மார்கன் ஸ்டான்லி நிறுவனம் இயங்கியுள்ளது. நிறுவனத்தின் ஆலோசகர்களாக சிரில் அமர்சந்த் மங்கல்தாஸ், டேவிக் போக் அண்ட் வால்ட்வெல் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். ரிலையன்ஸ் ரீட்டெயில் பொதுப்பட்டியலாக மாற்றும் நோக்கில் பணிகளை அந்நிறுவனம் செய்து வருகிறது.அந்த பங்குகளை ரிலையன்ஸ் ஊழியர்களுக்கு வழங்கும் ஆப்சனையும் அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
ஆன்லைனில் பிரபலநிறுவனங்களாக உள்ள அமேசான், பிளிப்கார்ட் மற்றும் வால்மார்ட்டுக்கு போட்டியாக இந்த பணிகளை இஷா அம்பானி செய்து வருகிறார். 2020 ஆண் ஆண்டு RRVL நிறுவனம் உலகின் பல்வேறு முதலீட்டாளர்களிடம் இருந்து 47,625 கோடி ரூபாய் முதலீட்டை பெற்றது. இந்த முதலீட்டில்,சவுதி அரேபியா,சிங்கப்பூர்,ஐக்கிய அரபு அமீரகம், ஜெனரல் அட்லாண்டிக்,சில்வர் லேக் உள்ளிட்ட முதலீட்டாளர்களும் இடம்பிடித்துள்ளனர். பங்குச்சந்தைகளில் வெளியிடுவதற்கு முன்பாக இந்த நிறுவனத்தின் மதிப்பு 4 லட்சத்து 21 ஆயிரம் கோடி ரூபாயாகும். இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் சில்லறை வர்த்தகத்துறைக்கு தனது ஆதரவை தெரிவிக்கும் நோக்கில் QIA தனது முதலீட்டை செய்து வருவதாக அதன் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அதானி நிறுவனத்துக்கு ஆதரவளித்து வந்த இதே QIA நிறுவனம் தற்போது அம்பானிக்கு ஆதரவுக்கரம் நீட்டி வருகிறது.