சந்தைகளில் அபார உயர்வு..
இந்திய பங்குச்சந்தைகளில் ஜூலை முதல் தேதியான திங்கட்கிழமை லேசான ஏற்றம் காணப்பட்டது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 443புள்ளிகள் உயர்ந்து 79 ,476 புள்ளிகளாக வர்த்தகம் நிறைவுற்றது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 131புள்ளிகள் அதிகரித்து 24,142 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவுற்றது. Tech Mahindra, Wipro, Bajaj Finance, UltraTech Cement, Grasim Industries உள்ளிட்ட நிறுவன பங்குகள் லாபம் கண்டன. NTPC, Eicher Motors, Dr Reddy’s Labs, SBI, Apollo Hospitals நிறுவன பங்குகள் சரிவை கண்டன. ஆற்றல் துறை பங்குகளைத்தவிர்த்து மற்ற அனைத்து துறை பங்குகளும் நல்ல லாபம் கண்டன. பொதுத்துறை வங்கிகள், ரியல் எஸ்டே மற்றும் பிற துறைகளின் பங்குகள் உயர்ந்து முடிந்தன. தகவல் தொழில்நுட்பத்துறை மொத்தமாக 2 விழுக்காடு ஏற்றம் கண்டன. Tech Mahindra, Grasim Industries, UltraTech Cement, PB Fintech, Persistent Systems, ACC, L&T Finance, Emami, Oracle Financial Services, Indraprastha Gas, Glenmark Pharma, Biocon, LIC Housing Finance உள்ளிட்ட 300க்கும் மேற்பட்ட நிறுவன பங்குகள் 52 வாரங்களில் இல்லாத புதிய உச்சம் தொட்டன. சென்னையில் வெள்ளிக் கிழமை, 22 கேரட் ஆபரணத்தங்கம் விலை மாற்றமின்றி,. 53 ஆயிரத்து 480ரூபாயாக உள்ளது. ஒரு கிராம் தங்கம் 6685 ரூபாயாக விற்கப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி 20 காசுகள் விலை உயர்ந்து 94 ரூபாய் 70 காசுகளாக விற்பனை செய்யப்படுகிறது. கட்டி வெள்ளி கிலோ 200ரூபாய் உயர்ந்து 94ஆயிரத்து 700 ரூபாயாக விற்கப்படுகிறது. மேலே சொன்ன விலைகளுடன் செய்கூலி, சேதாரம் என குறிப்பிட்ட தொகை வசூலிக்கப்படும் அது கடைக்கு கடை மாறுபடும், ஆனால் நிலையான ஜிஎஸ்டியாக 3 விழுக்காடு கண்டிப்பாக அனைத்து நகைகளுக்கும் வசூலிக்கப்படும் என்பதை நகை வாங்குவோர் நினைவில் வைத்துக்கொள்ளவும்.