பியூரிட்டை வாங்கிய ஏஓ ஸ்மித்..
இந்தியாவில் வாட்டர் பியூரிஃபையர் செய்யும் பிரபல தயாரிப்புகளை பியூரிட் என்ற பெயரில் இந்துஸ்தான் யுனிலிவர் தயாரித்து விற்பனை செய்து வந்தது. இந்நிலையில் அந்த பிஸினஸை தற்போது ஏஓ ஸ்மித் நிறுவனம் வாங்கிவிட்டது. இந்திய மதிப்பில் 601 கோடி ரூபாய்க்கு இந்த டீல் முடிந்திருக்கிறது. 120 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு இந்த விற்பனை நடந்துள்ளது.
சென்னையில் கடந்த 2004-ல் பியூரிட் நிறுவனம் முதல் முதலில் அறிமுகப்படுத்தியது. 20 ஆண்டுகள் பயணத்தை அந்நிறுவனம் நிறைவு செய்ய இருக்கிறது. பியூரிட் நிறுவனத்தை ஏ.ஓ.ஸ்மித் நிறுவனம் கைப்பற்றும் பணி இந்தாண்டு இறுதிக்குள் முடிவடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 2024 நிதியாண்டில் தண்ணீர் சார்ந்த பிஸ்னசில் மட்டும் 293 கோடி ரூபாய் லாபத்தை இந்துஸ்தான் யூனிலிவர் நிறுவனம் பெற்றுள்ளது. இந்துஸ்தான் யுனிலிவர் நிறுவனத்தை முழுமையாக வாங்கியுள்ள ஏஓ.ஸ்மித் நிறுவனம் அமெரிக்காவை பூர்விகமாக கொண்டதாகும். லட்சக்கணக்கானோர் பியூரிட்டை பயன்படுத்தி வரும் நிலையில் அதனை ஏ.ஓஸ்ஸ்மித் நிறுவணம் தொடர விரும்புவதாக அந்நிறுவனத்தின் மூத்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உணவு, மற்றும் அழகு சாதன பொருட்கள் உற்பத்தியில் கவனம் செலுத்தும் என்று கூறப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரியில் அன்னபூர்னா ஆட்டா மற்றும் கேப்டன் குக் ஆகிய பிராண்டுகளை இந்துஸ்தான் யுனிலிவர் நிறுவனம் விற்பனை செய்துவிட்டது.
2024 நிதியாண்டில் மட்டும் 59,579 கோடி ரூபாய் வருவாயும், அதில் 10,114 கோடி ரூபாய் லாபத்தையும் அந்நிறுவனம் ஈட்டியது. வீட்டு உபயோக பொருட்களின் பிஸ்னஸ் மட்டும் 21,900 கோடி ரூபாய்க்கு நடந்துள்ளது. ஏற்கனவே சந்தையில் யூரேக்கா ஃபோர்ப்ஸ் கென்ட் உள்ளிட்ட நிறுவனங்கள் போட்டியில் இருக்கும் நிலையில் பியூரிட் நிறுவனம் ஏ.ஓ.ஸ்மித் நிறுவனத்துக்கு கைமாற இருக்கிறது.