தேவையானதை கொடுக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்!!!!
உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி 24ம் தேதி போர்தொடுக்கத் தொடங்கிய ரஷ்யா, பல்வேறு மேற்கத்திய நாடுகளின் கண்டனங்களுக்கு ஆளாகியுள்ளது. பொருளாதார தடையால் மிகவும் பாதிப்படைந்துள்ள ரஷ்யா தனது நட்பு நாடான இந்தியாவிடம் ஒரு பட்டியலை கேட்டுள்ளது. இந்த பட்டியலில் கார்கள், விமானங்கள் உள்ளிட்டவற்றை உற்பத்தி செய்யத் தேவையான உதிரி பாகங்கள் உள்ளிட்ட 500 பொருட்கள் இடம்பிடித்துள்ளன. வழக்கத்துக்கு மாறாக நண்பனான ரஷ்யா கேட்டுள்ள பட்டியலில் எத்தனை பொருட்களை இந்தியா தரும் என்ற தெளிவான விளக்கம் கிடைக்கப் பெறவில்லை.
இதுதான் சரியான சந்தர்ப்பம் என வணிகத்தை செய்வதில் இந்தியா ஆர்வம் காட்டி வருவதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.
மேற்கத்திய நாடுகள் விதித்துள்ள பொருளாதார தடைக்கும் பாதிப்பு இல்லாமல், நண்பன் கேட்டான் என்பதற்காக
சில பொருட்களை தரவும் சில நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகின்றன. எந்த துறை பொருட்களை இந்தியா எவ்வளவு அனுப்ப வேண்டும் என்ற பட்டியல் குறித்து இருநாட்டு அதிகாரிகள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாக தகவல் கசிந்துள்ளது. இந்த விவகாரம் குறித்து இந்திய அரசு விரிவான விளக்கம் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.