அவதூறு கேஸ் போட்ருவேன் பாருங்க..
Societe Generale என்ற நிறுவனத்தைச் சேர்ந்த கவிஷ் கடாரியா என்பவர்தான் வழக்குப்போடுவதாக கூறியுள்ள நபர். இவர் ஹாங்காங்கில் பணியாற்றி வரும் சூழலில், 3,000 கோடி ரூபாய் மதிப்புள்ள தனது பங்குகளை விற்றதாக கூறப்படுகிறது. இவர் செய்த அறிவிப்புகளால் ஏகப்பட்ட முதலீட்டாளர்கள் பாதிக்கப்பட்டதாக புகார்கள் எழுந்தன. இந்த நிலையில் தாம் எந்த தவறும் செய்யவில்லை என்றும், இன்னும் அந்த பிரெஞ்சு வங்கியில்தான் வேலை செய்வதாகவும், போலியான தகவல்களை பரப்ப வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். குறிப்பிட்ட வங்கியில்தான் தொடர்ந்து பணியாற்றி வருவதாக கூறியுள்ள கவிஷ், தனது பிம்பத்துக்கு இழுக்கு ஏற்படுத்த முயற்சி செய்வோர் மீது அவதூறு வழக்குகள் தனித்தனியாக தொடரப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். Kotak Institutional Equities என்ற நிறுவனத்தில் நடந்த நடுத்தர மற்றும் சிறிய கேபிடல் ஃபண்ட்கள்தான் இந்த பிரச்னைக்கு காரணமாக கூறப்படுகிறது. குறிப்பிட்ட அந்த நிறுவனம்,சுகாதாரம், ரியல் எஸ்டேட் துறைகளில் அதிக முதலீடுகளை செய்து வருகிறது. குறிப்பிட்ட தனிநபர் வெளியிட்ட அறிவிப்பால் பலர் பாதிக்கப்பட்ட நிலையில், தனிநபர் அளித்த பரிந்துரை பங்குகளை நீக்கியுள்ளதாகவும் அந்த தரகு நிறுவனம் தெரிவித்துள்ளது.