5 நிமிஷத்துல அமெரிக்காவின் பிரச்சனையை தீர்ப்பேன்-வாரன் பஃப்பெட்..
இந்தியா மட்டுமில்லை உலகையே ஆட்சி செய்ய நினைக்கும் அமெரிக்காவிலும் கடன் பிரச்சனை தான் பெரிய பிரச்சனையாக இருக்கிறது. அதிகரிக்கும் கடன் அளவு அந்நாட்டில் மிக முக்கிய அரசியல் பிரச்சனையாக மாறியுள்ளது. பெரிய பணக்கார்களான ரேடாலியோ, ஜேமிடிமான் ஆகியோரும் அமெரிக்க கடன் நிலைமை குறித்து தங்கள் கருத்துகளையும் கவலைகளையும் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் உலகில் உள்ள பெரிய பணக்காரர்களில் ஒருவரும், மூத்த முதலீட்டாளருமான வாரன் பஃப்பெட் ஒரு புதிய திட்டத்தை முன் வைத்துள்ளார். அதன்படி, அமெரிக்காவின் நிதிபற்றாக்குறையை தம்மால் 5 நிமிடங்களில் சரிசெய்ய முடியும் என்று கூறியுள்ளார். அமெரிக்க உள்நாட்டு தயாரிப்பில் 3 விழுக்காடுக்கு மேல் நிதி பற்றாக்குறை வரக்கூடாது என்று ஒரு சட்டம் இயற்றினாலே போதும் என்றும் அவர் கூறியுள்ளார். வாரனின் மறைந்த முன்னாள் நண்பரான சார்லி மங்கர் பேசியதை சுட்டிக்காட்டிய வாரன், ஊக்கத் தொகையை கொடுத்தால், திறமையான வேலைகள் நடக்கும் என்று சார்லி சொன்னதை வாரன் சுட்டிக்காட்டியுள்ளார். வாரன் சொன்ன இதே பாணியைத்தான் ஜெர்மனி செய்து வருகிறது. கடந்த மே மாதம் வரை அமெரிக்காவின் நிதி பற்றாக்குறை 1.2 டிரில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளது. 2024 நிதியாண்டின் கடன் என்பது உள்நாட்டு உற்பத்தியில் 97.3விழுக்காடாக இருக்கிறது. இப்படி அதிகளவில் செலவு செய்தால் அமெரிக்காவில் கடன் சுமை அதிகரிக்கும் என்று அந்நாட்டு பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.