₹5,511 கோடி நிகர லாபமீட்டிய ஐசிஐசிஐ வங்கி !
ஐசிஐசிஐ வங்கி தனது இரண்டாம் காலாண்டில் ஏறத்தாழ 25 % அளவு லாபம் ஈட்டியிருக்கிறது, வங்கியின் ஒருங்கிணைந்த நிகர லாபம் 6,092 கோடியாக உயர்ந்துள்ளது, முந்தைய காலாண்டில் வங்கியின் நிகர லாபமானது 4,882 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த நிதி ஆண்டின் இதே காலகட்டத்தை ஒப்பிடும்போது மொத்த வருமானம் ரூ.39,289.60 கோடியாக இருந்தது, தற்போது ரூ.39,484.50 கோடியாக உயர்ந்து ஓரளவு அதிகரித்துள்ளது என்று ஐசிஐசிஐ வங்கியின் செய்திக் குறிப்பொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த காலாண்டில் தனிப்பட்ட வங்கி செயல்பாடுகளின் நிகர லாபமானது 30 சதவீதம் உயர்ந்து ரூ.5,511 கோடியாக இருக்கிறது, இது கடந்த காலாண்டில் ரூ.4,251 கோடியாக இருந்தது. வருமானமானது ரூ.23,651 கோடியிலிருந்து ரூ.26,031 கோடியாக உயர்ந்துள்ளது. செப்டம்பர் 30, 2021 வரை செயல்படாத சொத்துக்களின் மதிப்பு (என்பிஏ) 4.82 சதவீதமாக வீழ்ச்சியடைந்திருப்பதால் வங்கியின் சொத்து மதிப்பீடு முன்னேற்றத்தைக் காட்டியது, இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 5.17 சதவீதமாக இருந்தது. நிகர வாராக் கடன்களின் மதிப்பு 1 சதவீதத்திலிருந்து 0.99 சதவீதமாக வீழ்ச்சியடைந்திருக்கிறது.