புரோட்டீன் பவுடர் பயன்படுத்துபவரா நீங்கள்… எச்சரிக்கை..

தேவையில்லாமல் புரோட்டீன் பவுடர்களை எடுத்துக்கொண்டால் அது நிச்சயம் பாதிப்பை ஏற்படுத்தும் என்று ஐசிஎம்ஆர் அமைப்பின் துணை அமைப்பான NINஎச்சரித்துள்ளது., புரோட்டீன் பவுடர்களை எடுத்துக்கொள்வதால் தசைகள் பெரிதாகவோ, வலுவாகவோ ஆகாது என்று தெளிவுபடுத்தியுள்ளது ஐசிஎம்ஆர் அமைப்பு. அதிகப்படியான புரோட்டீன் பவுடர்களை எடுத்துக்கொள்வதால் எலும்பில் உள்ள ஊட்டச்சத்துகள் மற்றும் கிட்னி செயலிழப்பு ஆகியவை ஏற்படலாம் என்றும் ஐசிஎம்ஆர் எச்சரித்துள்ளது. பருப்புகள் 30 கிராம் மற்றும் 80 கிராம் அளவுக்கு இறைச்சி ஒரு நாளில் எடுத்துக்கொள்வதே உடலுக்கு தேவையான புரதத்தை அளித்துவிடும் என்றும் சப்ளிமன்ட்ஸ் தேவையில்லை என்றும் தெரிவிக்கிறது. அதிக உடல் உழைப்பு இல்லாதவர்களுக்கு புரதம் பெரிய அளவில் தேவையில்லை என்றும் அந்த அமைப்பு எச்சரிக்கிறது. முட்டை மற்றும் பாலின் உப பொருட்களில் இருந்துதான் இணை உணவுகள் தயாரிக்கப்படுகின்றன. இவை தவிர்த்து சர்க்கரைகள், செயற்கை நிறமூட்டிகளும் சேர்க்கப்படுகின்றன. இதை நீண்ட நாட்கள் கண்டிப்பாக சாப்பிடவே கூடாது என்றும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இறைச்சியை விரும்பாதவர்கள் பீன்ஸ், பருப்பு வகைகள் ,விதைகளின் மூலமாகவே புரதங்களை எடுத்து வருகின்றனர். இறைச்சி மற்றும் பால், முட்டைகளிலும் அதிக புரதம் இருக்கிறது. விலை குறைவாகவும், மிகுந்த புரதமும் பருப்பு வகைகளில் உள்ளன. சைவ உணவுகளில் உள்ள புரதம் 70 முதல் 85 விழுக்காடு வரை எளிதில் ஜீரணம் ஆகி விடுகிறது. ஒரு நாளில் 60 கிராம் புரதம் இருந்தால் அது உடலுக்கு தேவையான அமினோ அமிலங்களை தருகிறது என்றும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.