ஒப்புதல் தந்த பங்குதாரர்கள்..
ஐடிஎப்சி வங்கியின் பங்குகளை ஐடிஎப்சி நிறுவனத்துடனே இணைப்பதற்கு, பங்குதாரர்கள் இசைவு தெரிவித்துள்ளனர். தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் கடந்த 17 ஆம் தேதி ஒரு கூட்டத்தை நடத்தியது. அதில் ஐடிஎப்சி ஃபர்ஸ்ட் வங்கியையும் ஐடிஎப்சி நிறுவனத்தையும் இணைக்க முயற்சி நடந்தது. அதில் 4-ல் 3 பங்கு அளவுக்கு பங்குதாரர்கள், ஐடிஎப்சி வங்கி நிறுவனத்தை அதன் தாய் நிறுவனமான ஐடிஎப்சியுடன் இணைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. ஈ-ஓட்டிங் முறையில் இதற்கான கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஐடிஎப்சி நிதி நிறுவனத்தையும், ஐடிஎப்சி நிறுவனத்தையும் இணைக்க கடந்தாண்டு ஜூலையிலேயே பணிகள் தொடங்கின. புதிய இணைப்பின்படி,ஐடிஎப்சி பங்குதாரர்கள் தற்போது 100 பங்குகள் வைத்திருக்கிறார்கள் என்றால் இனி அவர்களுக்கு 155 பங்குகள் அளிக்கப்படும். இந்த இரண்டு நிறுவன பங்குகளின் ஃபேஸ் வேல்யுவும் 10 ரூபாயாக இருக்கிறது.
சனிக்கிழமை நிலவரப்படி, ஐடிஎப்சி ஃபர்ஸ்ட் வங்கி பங்குகள் 0.26 விழுக்காடு அளவுக்கு உயர்ந்துள்ளது. ஒரு பங்கின் விலை மும்பை பங்குச்சந்தையில் 77.44 ரூபாயாக விற்கப்படுகிறது.