இடைக்கால ஈவுத்தொகை.. பரிசீலிக்கப்படும் என ஐடிஎஃப்சி தகவல்..!!
பங்கு மூலதனத்தின் மீது இடைக்கால ஈவுத்தொகையை பரிசீலனை செய்து அறிவிப்பதாக ஐடிஎஃப்சி லிமிடெட் தெரிவித்துள்ளது.
ஐடிஎஃப்சி லிமிடெட்டின் அதிகாரிகள் ரீதியிலான கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அப்போது, வரும் 6-ம் தேதி நடைபெற இருக்கும் IDFC இயக்குநர்கள் கூட்டத்தில் பங்கு மூலதனத்தின் மீது இடைக்கால ஈவுத்தொகையை பரிசீலனை செய்து அறிவிப்பதாக அறிவித்தது.
செபியிடம் தாக்கல் செய்த அறிக்கையில் “ஏப்ரல் 06, 2022 அன்று, ஐடிஎஃப்சி லிமிடெட் இயக்குநர்கள் குழு, நிறுவனத்தின் செலுத்தப்பட்ட ஈக்விட்டி பங்கு மூலதனத்தின் மீது இடைக்கால ஈவுத்தொகையை பரிசீலித்து அறிவிக்கும் என்று தெரிவிக்க விரும்புகிறோம்” என்று ஐடிஎஃப்சி தெரிவித்துள்ளது.
IDFC என்பது இந்தியாவின் முன்னணி நிதி நிறுவனமாக உள்கட்டமைப்பு நிதியுதவி, உள்கட்டமைப்பு மேம்பாடு, முதலீட்டு வங்கி மற்றும் பிற சேவைகளை வழங்குகிறது. IDFC Ltd இன் பங்குகள் ஒரு வருட காலப்பகுதியில் 34% க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது, அதேசமயம் நிதிச் சேவை நிறுவனத்தின் பங்குகள் 2022 –ம் ஆண்டில் இதுவரை 0.3 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளது.