பெரிய தொகை வெளியே போக போகுதா?
இந்தியாவில் இது தேர்தல் காலம் என்பதால் முடிவுகள் எப்படி வேண்டுமானாலும் மாறலாம் என்ற சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில் இந்திய பங்குச்சந்தைகளில் இருந்து வரும் மாதம் பெரிய தொகை வெளியேற வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் இருந்து வெளியேறும் முதலீடுகள் நம்மை விட குறைந்த விலை உள்ள மாற்று சந்தையான சீன சந்தைக்கு போக அதிக வாய்ப்புள்ளது. மே மாதத்தில் மட்டும் இந்திய சந்தையில் இருந்து 3.5 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள முதலீடுகள் வெளியேறியுள்ளன. இது கடந்தாண்டைவிட மிகமிக குறைவான அளவாகும். பிரதமர் மோடியின் அரசு மீது நம்பிக்கை குறைந்ததே இதற்கு காரணமாக நிபுணர்கள் தெரிவிக்கின்றன்ர். அதே நேரம் சீன சந்தைகள் எதிர்பார்த்த வீழ்ச்சியை சந்திக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையேயான மதிப்பீட்டு இடைவெளி நாளுக்கு நாள் அதிகரித்தபடியே இருப்பதாக வெளிநாட்டு முதலீட்டாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இந்தியாவில் வரும் ஜுன் 1 ஆம் தேதி இறுதிகட்ட வாக்குப்பதிவும், ஜூன் 4 ஆம் தேதி வாக்குகளும் எண்ணப்படுகின்றன. மொத்தம் 543 தொகுதிகளில் 400க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பாஜக வெல்லும் என்று அக்கட்சி நம்பி வருகிறது. சிட்டி குழுமம் அண்மையில் வெளியிட்ட தரவுகளில் சீன ஈக்விட்டியில் தங்கள் பங்குகள் நியூட்ரலாகவும், இந்தியாவில் பங்குகள் அதிக வெயிட் உள்ளவையாகவும் மதிப்பிட்டுள்ளன.
இந்தியாவும் சீனாவும் இரண்டு மிகப்பெரிய சந்தைகளாக இருக்கும் நிலையில் இரண்டில் ஒரு நாட்டில் அதிக பங்குகள் வெளியேறினாலும் மற்றொரு தரப்பில் அது முதலீடு செய்யப்படுகிறது.