டெஸ்லா இந்தியாவுக்கு வந்தால்..!!!.

கார் சந்தையில் உலகிலேயே அமெரிக்கா, சீனா ஆகிய இரண்டு நாடுகள்தான் முதல் இரண்டு இடங்களில் இருக்கின்றன. இந்த போட்டியில் இந்தியா 3 ஆவது இடத்தில்தான் இருக்கிறது. டெஸ்லா நிறுவனம் உலகின் பல்வேறு நாடுகளிலும் தனது கார்களை அறிமுகப்படுத்தி,கவனம் ஈர்த்து வருகிறது. இந்தியாவில் மின்சார கார்களை விற்கும் நிறுவனங்களின் போட்டி, மெல்ல மெல்ல உயர்ந்து வருகிறது. இந்த நிலையில்தான் டெஸ்லா நிறுவனம் அடுத்தாண்டு இந்தியாவிற்குள் வர இருக்கிறது.
வளர்ந்த நாடுகளில் வதிக்கப்படும் வரிகளைவிட இந்தியாவில் வரிகள் அதிகம் என்பதால் இந்தியாவிற்கு டெஸ்லா கார்கள் வருவது சந்தேகம் என்று கூறியிருந்த மஸ்க், ஒரே ஆண்டில் தனது நிலைப்பாட்டை மாற்றி, மத்திய அரசுடன் பேசி பணிய வைத்திருக்கிறார். இந்தியாவிற்கு டெஸ்லா வந்தால் எந்த அளவுக்கு உள்ளூர் வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்பது கேள்விக்குறிதான். டெஸ்லா இந்தியாவுக்கு வந்தால்,டிவிஎஸ், ஓலா, டாடா நிறுவனங்கள் இதுவரை செய்துள்ள முதலீடுகள் பாதிக்கப்படும் என்று அஞ்சுகின்றனர். ஏற்கனவே வெளிநாட்டு நிறுவனங்களான ஹியூண்டாய், பிஎம்டபிள்யூ,ஆடி ஆகிய நிறுவனங்கள் இந்தியாவிற்குவந்து மின்சார கார்களை தயாரித்து வருகின்றன. எனினும் நடுத்தர மக்கள் வாங்க உகந்த கார்களை வெகு சில நிறுவனங்கள் மட்டுமே அளிக்கின்றன இந்தியாவிற்கு டெஸ்லா நிறுவன கார்கள் வந்தால் தொடக்க விலை 20லட்சம் ரூபாயாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வியட்நாமைச் சேர்ந்த வின்ஃபாஸ்ட் நிறுவனமும் இந்தியாவில் மின்சார கார்கள் உற்பத்திக்கு திட்டமிட்டுள்ளது. இதனால் சந்தையில் கடுமையான போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் வழக்கமான இன்ஜின்கள் கார்கள் விற்பனை சரிந்து வரும் நிலையில், மின்சார கார்கள் மற்றும் ஹைப்ரிட் ரக கார்கள் வாடிக்கையாளர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளன. இவை தவிர்த்து சிஎன்ஜி ரகத்தில் இயங்கும் கார்களும் கவனம் ஈர்த்திருக்கின்றன. தற்போதுள்ள சந்தை விரைவில் 4 வகையாக பிரியும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. வருங்காலத்தில் கார்களின் விற்பனை என்பது நிச்சயமற்ற சந்தையாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.