லாபம் வந்தது போடு தகிட தகிட..
வாரத்தின் கடைசி வர்த்தக நாளான அக்டோபர் 6ஆம் தேதி இந்திய சந்தைகளில் பெரிய முன்னேற்றம் காணப்பட்டது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 364 புள்ளிகள் உயர்ந்து 65995புள்ளிகளாக வர்த்தகம் முடிந்தது.இதேபோல் தேசிய பங்குச்சந்தையிலும் ஏற்றம் காணப்பட்டது. 107 புள்ளிகள் உயர்ந்து தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 19,653 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவுற்றது. இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றம் பெற ரிசர்வ் வங்கியின் ரெபோ வட்டி விகித அறிவிப்பு முக்கிய காரணமாக இருக்கிறது. Bajaj Finserv, Bajaj Finance, Titan Company, IndusInd Bank,Tata Consumer Productsஆகிய நிறுவன பங்குகள் கணிசமான லாபத்தை பதிவு செய்தன.அதேநேரம் HUL, ONGC, Coal India, Bharti Airtel, Asian Paints உள்ளிட்ட நிறுவன பங்குகள் சரிவில் முடிந்தன.ரியல் எஸ்டேட் துறை பங்குகள் 3விழுக்காடு வரை ஏற்றம் பெற்றன.தகவல் தொழில்நுட்பம்,உலோகம்,ஆட்டோமொபைல் உள்ளிட்ட துறை பங்குகள் லாபத்தை பதிவு செய்தன. Tata Consultancy Services, Angel One, Sasken Technologies, Quick Heal Technologies, GOCL Corporation, உள்ளிட்ட 250 நிறுவன பங்குகள் 52 வாரங்களில் இல்லாத உச்சத்தை தொட்டன.சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து விற்பனையானது. ஒரு கிராம் தங்கம் 10 ரூபாய் விலை குறைந்து 5285 ரூபாயாகவும், ஒரு சவரன் தங்கம் 42 ஆயிரத்து280 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி விலை கிராமுக்கு 50 காசுகள் குறைந்து 73 ரூபாயாகவும்,ஒரு கிலோ தங்கம் 500ரூபாய் குறைந்து 73ஆயிரம் ரூபாயாகவும் விற்பனையாகிறது. இந்த விலைகளுடன், 3%ஜிஎஸ்டி மற்றும் செய்கூலி,சேதாரம் சேர்க்கப்படவேண்டும், ஆனால் செய்கூலி, சேதாரம் கடைக்கு கடை மாறுபடும் என்பதை கவனத்தில் கொண்டு நகைகளை வாங்கலாம்.